नतानां मन्दानां भवनिगलबन्धाकुलधियां
महान्ध्यां रुन्धानामभिलषितसन्तानलतिकाम् ।
चरन्तीं कम्पायास्तटभुवि सवित्रीं त्रिजगतां
स्मरामस्तां नित्यं स्मरमथनजीवातुकलिकाम् ॥ ५५॥
நதாநாம் மந்தா³நாம் ப⁴வனிக³ல ப³ந்தா⁴குல தி⁴யாம்
மஹாந்த்⁴யாம் ருந்தா⁴நாமபி⁴லஷித ஸந்தான லதிகாம் ।
சரந்தீம் கம்பாயாஸ் தடபு⁴வி ஸவித்ரீம் த்ரிஜக³தாம்
ஸ்மராமஸ் தாம் நித்யம் ஸ்மர மத²ன ஜீவாது கலிகாம் ॥ 55॥
ஸம்ஸாரமெனும்
விலங்கின் பிணைப்பால் மனம் கலங்கிய அக்ஞானிகளாம் பக்தர்களின் பேரிருளைப் போக்குபவளும்
விரும்பியதைத் தரும் கற்பகக் கொடியும், கம்பைக் கரையில் உலவுபவளும், மூவுலகை ஈன்றவளும்,
மன்மத வைரிக்கு உயிரூட்டும் பூங்கொத்து போன்றவளுமான அத்தேவியை எப்போதும் தியானிப்போம்.
இல்வாழ்க்கை கட்டில் இறுகியுள் ளேமுற்ற
ஏழையராம்
நல்லன்பர் பேரல் நசிக்கும், விரும்பிய
நல்குகின்ற
செல்வக் கொடியாகும், சேயக்கம் பையாடும்
தேவிமூன்று
நல்லுல கீன்றவள், நாரனல் லோர்க்குயிர்
நல்கிணரே!
கட்டு-விலங்கு;
இறுகி-பிணைந்து ஏமுற்று-கலங்கி; ஏழையர்-அறியாமை உழன்றோர்; அன்பர்-பக்தர்; பேர்+அல்-பேரிருள்;
நசிக்கும்-அழிக்கும்; செல்வக் கொடி-கற்பகத்தரு; சேயம்-கரை; ஆடும்-நடமாடும்/உலவும்;
நாரன்-மன்மதன்; இணர்-பூங்கொத்து; (நாரன் அல்லோன் - மன்மத வைரி - சிவன்)
பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):
இல் வாழ்க்கை
கட்டில் இறுகி உள் ஏமுற்ற ஏழையராம் நல்லன்பர் பேர் அல் நசிக்கும், விரும்பிய நல்குகின்ற
செல்வக் கொடியாகும், சேயக் கம்பை ஆடும் தேவி மூன்று நல்லுலகு ஈன்றவள், நாரன் அல்லோர்க்கு
உயிர் நல்கு இணரே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam