परा विद्या हृद्याश्रितमदनविद्या मरकत-
प्रभानीला लीलापरवशितशूलायुधमनाः ।
तमःपूरं दूरं चरणनतपौरन्दरपुरी-
मृगाक्षी कामाक्षी कमलतरलाक्षी नयतु मे ॥ ५६॥
பரா வித்³யா ஹ்ருʼத்³யாஶ்ரித மத³னவித்³யா மரகத-
ப்ரபா⁴ நீலா லீலா பரவஶித ஶூலாயுத⁴ மனா: ।
தம: பூரம் தூ³ரம் சரணனத பௌரந்த³ர புரீ-
ம்ருʼகா³க்ஷீ காமாக்ஷீ கமல தரலாக்ஷீ நயது மே ॥ 56॥
உயர் ஸ்ரீவித்யையும், இதயதுக்கின்பமளிப்பவளும்,
மன்மதக்கலை கொண்டவளும், மரகதம்போல் கருத்த நிலையிலிருப்பவளும், தன்வயமாக்கப்பட்ட சூலபாணியின்
மனத்தை உடையவளும், புரந்தரனுலகப் பெண்கள் தன் திருவடிகளில் வணங்கப் பெற்றவளும், தாமரைப்போல்
அழகு கண்களுள்ளவளும், காமாக்ஷி என்னுடைய பாபக்குவியலைத் துரத்தட்டும்!
உயர்திரு வித்தையள், உள்ளத்துக் கீவள் உவக்கயின்பம்;
வயக்கும் மரகத மாமையள், மாரன வன்கலையாள்;
வயமாக சூலன் மனத்தினள், வான்பெண்டிர்
வாழ்த்தடியள்
கயக்கண்ணள் காமாட்சி கன்மபா வங்கள் கடிந்தருளே
திருவித்தை-ஸ்ரீவித்யா; வயக்கும்-ஒளிரும்;
மாமை-கருமை; வயம்-வசம்; வான்பெண்டிர்-புரந்தரனுலகப் பெண்டிர்; கயம்-தாமரை; கடிந்து-விலக்கி
பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):
உயர் திருவித்தையள், உள்ளத்துக்கு
ஈவள் உவக்க இன்பம்; வயக்கும் மரகத மாமையள், மாரனவன் கலையாள்; வயமாக சூலன் மனத்தினள், வான்பெண்டிர் வாழ்த்தடியள்; கயக்கண்ணள் காமாட்சி
கன்ம பாவங்கள் கடிந்தருளே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam