மே 05, 2017

மூகபஞ்சசதீ - ஸ்துதி சதகம் - 26

कबलिततमस्काण्डास्तुण्डीरमण्डलमण्डनाः
सरसिजवनीसन्तानानामरुन्तुदशेखराः
नयनसरणेर्नेदीयंसः कदा नु भवन्ति मे
तरुणजलदश्यामाः शम्भोस्तपःफलविभ्रमाः २६॥

கப³லித தமஸ் காண்டா³ஸ் துண்டீ³ர மண்ட³ல மண்ட³னா:
ஸரஸிஜ வனீ ஸந்தானாநாமருந்துத³ ஶேக²ரா:
நயன ஸரணேர் நேதீ³யம்ஸ: கதா³ நு வந்தி மே
தருணஜலத³ ஶ்யாமா: ஶம்போஸ் தப:²ல விப்ரமா: 26

அறியாமை இருளை விழுங்குவதும், தொண்டை தேசத்தை அலங்கரிப்பதும், தாமரைக் காட்டின் கூட்டங்களுக்கு துயரளிக்கும் சந்திரனை மணிமுடியாகக் கொண்டதும், நீருண்ட மேகம்போல் நீல நிறமுள்ளதும், சம்புவின் தவப்பயனானதுமான ஒன்று என் கண்களின் அருகில் எப்போது இருக்கும்?

அஞ்ஞான அல்நீக்கும், அம்செயும் தொண்டை அழவமதை,
கஞ்ச வனங்கட்கு கவ்வையல் லோன்சூடி கையணிந்த
குஞ்சியை, நீருண்ட கொண்டல் நிறத்ததை, கொள்வதென்றோ
செஞ்சடை யான்தவச் சீரையென் கண்களும் சென்றருகே?

அல்-இருள்; அம்-அழகு; தொண்டை அழவம்-துண்டீர் தேசம்; கஞ்சம்-தாமரை; கவ்வை-துன்பம்; அல்லோன்-சந்திரன்; சூடிகை-மணிமுடி; குஞ்சி-கேசம்; கொண்டல்-மேகம்; செஞ்சடையான்-சிவபெருமான்;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):

அஞ்ஞான அல்நீக்கும், அம்செயும் தொண்டை அழவமதை, கஞ்ச வனங்கட்கு கவ்வை அல்லோன் சூடிகையணிந்த குஞ்சியை, நீருண்ட கொண்டல் நிறத்ததை, கொள்வதென்றோ? செஞ்சடையான் தவச்சீரை என் கண்களும் சென்றருகே?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...