भ्रमरितसरित्कूले नीलोत्पलप्रभयाऽऽभया
नतजनतमःखण्डी तुण्डीरसीम्नि विजृम्भते ।
अचलतपसामेकः पाकः प्रसूनशरासन-
प्रतिभटमनोहारी नारीकुलैकशिखामणिः ॥ २२॥
ப்⁴ரமரித ஸரித்கூலே நீலோத்பல ப்ரப⁴யாऽऽப⁴யா
நதஜனதம: க²ண்டீ³ துண்டீ³ர ஸீம்னி விஜ்ருʼம்ப⁴தே ।
அசலதபஸாமேக: பாக: ப்ரஸூன ஶராஸன-
ப்ரதிப⁴ட மனோஹாரீ நாரீகுலைக ஶிகா²மணி: ॥ 22॥
இமயத் தவத்தோரின் பயனும், மாரவைரி
மனங் கவர்ந்ததும், பெண்குலத்தின் சிரோபூடணமுமான காமாக்ஷியானவள். தனது நீலோத்பலம் போன்ற
கருவொளியால் பம்பைக் கரையை வண்டுகள் நிறைத்ததுபோல் செய்துகொண்டு, வணங்குபவரின் அறியாமையைப்
போக்க்கிகொண்டும் தொண்டைநாட்டினுள் ஒளிர்கிறாள்.
தொண்டைப் பதியில் சுடர்வாள், இமயத்தின்
தூதவத்தர்
கண்ட பயனவள், காமனின் உள்ளம் கவர்ந்தவளாம்,
பெண்குல உச்சிப் பெருமணி, ஆம்பல்
பெறும்களம்போல்
வண்டினம் சூழ்பம்பை வாரம்அல் நீக்கும்
வணங்கினோர்க்கே
தொண்டைப் பதி-
காஞ்சிபுரம்; சுடர்வாள்-ஒளிவாள்; தூ தவத்தர்- தூய தவத்தினர்; உச்சி-சிரம்; பெருமணி-பெருமைக்குரிய
மணி; ஆம்பல்-நீலோற்பலம்; களம்-கருமை; வாரம்-கரை;
அல்- இருள்/மயக்கம்;
பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):
தொண்டைப் பதியில்
சுடர்வாள், இமயத்தின் தூ தவத்தர் கண்ட பயனவள், காமனின் உள்ளம் கவர்ந்தவளாம், பெண்குல
உச்சிப் பெருமணி, ஆம்பல் பெறும்களம்போல்,
வண்டினம் சூழ் பம்பை வாரம், அல் நீக்கும் வணங்கினோர்க்கே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam