सरसवचसां वीची नीचीभवन्मधुमाधुरी
भरितभुवना कीर्तिर्मूर्तिर्मनोभवजित्वरी ।
जननि मनसो योग्यं भोग्यं नृणां तव जायते
कथमिव विना काञ्चीभूषे कटाक्षतरङ्गितम् ॥ २१॥
ஸரஸவசஸாம் வீசீ நீசீப⁴வன்மது⁴மாது⁴ரீ
ப⁴ரிதபு⁴வனா கீர்திர்மூர்த்தி: மனோப⁴வ ஜித்வரீ ।
ஜனனி மனஸோ யோக்³யம் போ⁴க்³யம் ந்ருʼணாம் தவ ஜாயதே
கத²மிவ வினா காஞ்சீபூ⁴ஷே கடாக்ஷதரங்கி³தம் ॥ 21॥
காஞ்சி நகருக்கணியாகும் தாயே! உனது
கடாக்ஷ அலைத் தொடர்பின்றி, மனிதருக்கு தேனின் இனிமையைத் தாழ்த்தும் சுவையுள்ள மொழியழகும்,
உலகளாவிய கீர்த்தியும், மன்மதனை வெல்லும் மேனியழகும், மனதிற்கு விருப்பமான போக அனுபவங்களும்
எவ்வாறு கிடைக்கும்?
காஞ்சிக் கணிதாயுன் கண்கடை வங்கக்
களனிலாமல்
தீஞ்சுவைத் தேனுந்தீம் தேய மனிதர்க்குத்
தேமொழியின்
ஐஞ்ஞையும் பூமிநீள் அஞ்சும் அனங்கனின்
அங்கமேனி
மாஞ்சிலும், போக மனப்பற்றும் எங்கனம்
மாந்துவமே?
வங்க-அலை; களன்-தொடர்பு;
தீம்-இனிமை; தேய-தாழ்ந்து குறைய; ஐஞ்சை-அழகு; அஞ்சு-கீர்த்தி; அனங்கன்-மன்மதன்; மாஞ்சில்-பெருமை;
மனப்பற்று-விருப்பம்; மாந்து-அனுபவி; போக-சுகங்கள்
பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):
காஞ்சிக்கு
அணி, தாய் உன் கண்கடை வங்கக் களனிலாமல், தீஞ்சுவைத் தேனுந் தீம் தேய மனிதர்க்குத் தேமொழியின்,
ஐஞ்ஞையும் பூமி நீள் அஞ்சும் அனங்கனின் அங்கமேனி மாஞ்சிலும், போக மனப்பற்றும் எங்கனம்
மாந்துவமே?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam