मधुरवचसो मन्दस्मेरा मतङ्गजगामिनः
तरुणिमजुषस्तापिच्छाभास्तमःपरिपन्थिनः ।
कुचभरनताः कुर्युर्भद्रं कुरङ्गविलोचनाः
कलितकरुणाः काञ्चीभाजः कपालिमहोत्सवाः ॥ २३॥
மது⁴ரவசநா: மந்த³ஸ்மேரா மதங்க³ஜ கா³மின:
தருணிம ஜுஷஸ் தாபிச்சா²பா⁴ஸ் தம: பரிபந்தி²ன: ।
குசப⁴ரனதா: குர்யுர் ப⁴த்³ரம் குரங்க³விலோசனா:
கலித கருணா: காஞ்சீபா⁴ஜ: கபாலி மஹோத்ஸவா: ॥ 23
இன்சொல், மென்னகை, யானை போல் மதர்த்த
நடை, இளமை உடைத்தவள், காயாம்பூ ஒளியினள், அஞ்ஞானம் நீக்குபவள், தனபாரத்தால் வணங்கியவையும்,
மான்போல் கண்கள் கொண்டவளும், கருணை வடிவினள், காஞ்சியிலுள்ளவள் காபாலிக்கு மகிழ்ச்சியைத்
தருபவள். நமக்கவள் மங்களத்தை நல்கட்டும்.
இன்சொல், முறுவல், இபநடைக் கீடு, இளமையினள்;
மின்னும் மலர்காய மேனியள்; நீக்குவாள் மிச்சையினை;
அன்பினள், முன்சாய்க்கும் அங்கலி யள்மறி அட்சமுடை
அன்னைகாஞ் சீயள், அரக்கார்ப்பு; சேமம் அருளுவளே!
இபநடை-யானைநடை; ஈடு-பெருமை; மலர்காயம்-காயமலர்;
மிச்சை-அறியாமை; அங்கலி-தனம்; மறி-மான்; ஆர்ப்பு-மகிழ்ச்சி;
பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):
இன்சொல், முறுவல், இபநடைக்கு ஈடு, இளமையினள்;
மின்னும் மலர்காய மேனியள்; நீக்குவாள் மிச்சையினை; அன்பினள், முன்சாய்க்கும் அங்கலியள்
மறி அட்சமுடை, அன்னை காஞ்சீயள், அரக்கார்ப்பு; சேமம் அருளுவளே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam