ஏப்ரல் 08, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 99

सूक्तिः शीलयते किमद्रितनये मन्दस्मितात्ते मुहुः
माधुर्यागमसम्प्रदायमथवा सूक्तेर्नु मन्दस्मितम्
इत्थं कामपि गाहते मम मनः सन्देहमार्गभ्रमिं
श्रीकामाक्षि पारमार्थ्यसरणिस्फूर्तौ निधत्ते पदम् ९९॥

ஸூக்தி: ஶீலயதே கிமத்³ரி தனயே மந்த³ஸ்மிதாத் தே முஹு:
மாதுர்யாக³ம ஸம்ப்ரதா³யமத²வா ஸூக்தேர்னு மந்த³ஸ்மிதம்
இத்த²ம் காமபி கா³ஹதே மம மன: ஸந்தே³ஹமார்க³ ப்ரமிம்
ஸ்ரீகாமாக்ஷி பாரமார்த்²ய ஸரணி ஸ்பூ²ர்தௌ நிதத்தே பத³ம் 99

மலைமகளே! ஸ்ரீகாமாக்ஷி! உன்னெழில வாக்கு இனிமையென்னும் சாத்திர உட்பொருளை உன் புன்சிரிப்பிடம் பழக்கிக்கொள்கிறதா? அன்றி, புன்சிரிப்பு அவ்வாக்கிடமிருந்து பழக்கிக்கொள்கிறதா? என்மனம் இப்படியொரு ஐயத்தினால் சுற்றியலைகிறதேயன்றி, உண்மையறியும் முயற்சியில் அடியெடுத்து வைப்பதில்லையே!

உன்னெழில், சொல்லின் உருசிக் கலையதன் உட்பொருளை
உன்மென் நகைப்பினில் ஓதுமோ? அன்றி உனதுமூரல்
உன்சொல் லிடத்திடம் ஓதுமோ? உள்ளம் உழலுமையில்
அன்றியும் காமாட்சி ஐமவ தீமெய்க்காய் ஆற்றிலேனே!

எழில்-அழகு; சொல்-வாக்கு; உருசி-இனிமை; கலை-சாத்திரம்; ஓதல்-கற்றல்; மூரல்-மென்னகை; உழலும் -சுற்றியலையும்; ஐ-ஐயம்; ஐமவதி-இமவான் மகள்; மெய்-உண்மை; ஆற்றிலேன் - முயன்றிலேன்.

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


உன்னெழில்,  சொல்லின் உருசிக் கலையதன் உட்பொருளை, உன்மென் நகைப்பினில் ஓதுமோ? அன்றி உனதுமூரல், உன் சொல்லிடத்திடம் ஓதுமோ? உள்ளம் உழலும் ஐயில், அன்றியும் காமாட்சி ஐமவதீ மெய்க்காய் ஆற்றிலேனே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...