क्रीडालोलकृपासरोरुहमुखीसौधाङ्गणेभ्यः कवि-
श्रेणीवाक्परिपाटिकामृतझरीसूतीगृहेभ्यः शिवे ।
निर्वाणाङ्कुरसार्वभौमपदवीसिंहासनेभ्यस्तव
श्रीकामाक्षि मनोज्ञमन्दहसितज्योतिष्कणेभ्यो नमः ॥ १००॥
க்ரீடா³லோல க்ருʼபா ஸரோருஹ முகீ²ஸௌதா⁴ங்க³ணேப்⁴ய: கவி-
ஶ்ரேணீ வாக்பரிபாடிகாம்ருʼத ஜரீ ஸூதீ க்³ருʼஹேப்⁴ய: ஶிவே ।
நிர்வாணாங்குர ஸார்வபௌ⁴ம பத³வீ ஸிம்ஹாஸனேப்⁴யஸ்தவ
ஸ்ரீகாமாக்ஷி மனோஜ்ஞ மந்த³ ஹஸித ஜ்யோதிஷ்கணேப்⁴யோ நம: ॥ 100॥
மங்களமே, காமாக்ஷி! கேளியில்
விருப்புள்ள கருணையெனும் தாமரை முகத்தாள் உலாவும் மேன்மாடமும், கவிக்கூட்டத்தின் வாக்குத்திறன்
என்ற அமுத அருவிக்குப் பிறப்பிடமும், முத்தியின் தோற்றமான பேரரசின் அரியணையுமான மனதைக்
கவரும் உனது மந்தகாச ஒளிக்கதிர்களுக்கு என் வணக்கங்கள்.
ஆடல் விரும்பும் அருளெனும் அம்புய ஆனனிமேன்
மாடமும், பாவலர் வாக்குத் திறனாம் மதுவருவி
வீடதும், முத்திக்கு வேந்தா சனமதும், வெண்கதிராய்
ஊடாடும், காமாட்சி! உன்நகைக் கென்துதி ஒண்சிவையே!
ஆடல்-விளையாடல்/கேளி; அருள்-கருணை; அம்புயம்-தாமரை;
ஆனனி-முகமுடையாள், மேன்மாடம்-உப்பரிகை; பாவலர்-கவிசிரேட்டர்கள்; மது-அமுதம்; வீடு-பிறப்பிடம்;
வேந்தாசனம்-அரியணை; வெண்கதிர்-ஓளிக்கதிர்; ஒண்-ஒளிமிக்க; சிவையே-மங்களமே
பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):
காமாட்சி!, ஒண்சிவையே! ஆடல் விரும்பும் அருளெனும்
அம்புய ஆனனி மேன்மாடமும், பாவலர் வாக்குத் திறனாம் மது அருவி வீடதும், முத்திக்கு வேந்தாசனமதும், வெண்கதிராய் ஊடாடும், உன் நகைக்கு என்துதி!
மந்த³ஸ்மிதஶதகம் ஸம்பூர்ணம் ॥
மந்தஸ்மித சதகம் நிறைவுற்றது!!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam