ஏப்ரல் 07, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 98

आलोके तव पञ्चसायकरिपोरुद्दामकौतूहल-
प्रेङ्खन्मारुतघट्टनप्रचलितादानन्ददुग्धाम्बुधेः
काचिद्वीचिरुदञ्चति प्रतिनवा संवित्प्ररोहात्मिका
तां कामाक्षि कवीश्वराः स्मितमिति व्याकुर्वते सर्वदा ९८॥

ஆலோகே தவ பஞ்சஸாயகரிபோருத்³தா³ம கௌதூஹல-
ப்ரேங்க²ன் மாருத கட்டன ப்ரசலிதாதா³னந்த³து³க்³தாம்பு³தே:
காசித்³ வீசிருத³ஞ்சதி ப்ரதினவா ஸம்வித் ப்ரரோஹாத்மிகா
தாம் காமாக்ஷி கவீஶ்வரா: ஸ்மிதமிதி வ்யாகுர்வதே ஸர்வதா³ 98

காமாக்ஷி! மன்மதனது வைரியாருடைய பார்வை விழும்போதே, மட்டில்லா உற்சாகமென்னும் (துப்பு) காற்றின் அலைகள் மோதும்; அதனால் ஆனந்தப் பாற்கடலிலிருந்து வெளியாகும் ஞானக் கொழுந்தெனும் ஒரு புது அலையே உன்புன்னகை என்று கவிசிரேட்டர்கள் எப்போதும் விவரிக்கின்றனர்.

காமனின் வைரியர் கண்பார்க்க மோதும் கரையிலாத,
காமாட்சி, துப்பெனும் காற்றின் அலைகள்; கவிசிரேட்டர்,
தாமதால் இன்பாற் சலதரத் தேதோன்றும் சத்துமுளை
ஆமதாம் புத்தலை அன்னதாய் கூறுமுன் அம்நகையே!

கரை-மட்டு; துப்பு-உற்சாகம்; சலதரம்-கடல்; சத்து-அறிவு/ஞானம்; முளை-கொழுந்து;  அம்-ஒளி; நகை-புன்னகை; புத்தலை-புது அலை;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


காமாட்சி, காமனின் வைரியர் கண்பார்க்க மோதும் கரையிலாத, துப்பெனும் காற்றின் அலைகள்; கவிசிரேட்டர் தாம் அதால் இன் பாற்சலதரத்தே தோன்றும் சத்துமுளை ஆமதாம் புத்தலை அன்னதாய் கூறுமுன் அம்நகையே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...