चेतःक्षीरपयोधिमन्थरचलद्रागाख्यमन्थाचल-
क्षोभव्यापृतिसम्भवां जननि ते मन्दस्मितश्रीसुधाम् ।
स्वादंस्वादमुदीतकौतुकरसा नेत्रत्रयी शांकरी
श्रीकामाक्षि निरन्तरं परिणमत्यानन्दवीचीमयी ॥ ९७॥
சேத: க்ஷீர பயோதி⁴ மந்த²ர சலத்³ ராகா³க்²ய மந்தா²சல-
க்ஷோப⁴ வ்யாப்ருʼதி ஸம்ப⁴வாம் ஜனனி! தே மந்த³ஸ்மித ஸ்ரீஸுதா⁴ம் ।
ஸ்வாத³ம் ஸ்வாத³முதீ³த கௌதுகரஸம்(ஸா) நேத்ர த்ரயீ ஶாம்கரீ
ஸ்ரீகாமாக்ஷி! நிரந்தரம் பரிணமத்யானந்த³ வீசீமயீ ॥ 97॥
தாயே!
ஸ்ரீ காமாக்ஷி! மனமெனும் பாற்கடலில் மெல்ல அசையும் ஆசையாம் மந்தரமலையின் கடைவதால் வருகின்ற
உன் புன்னகையொளி என்னும் சிறந்த அமுதத்தைப் சங்கரரின் மூன்று கண்களும் ஆவலுடன் இடையறாதுப் பருகிப் பருகி இன்ப அலைகளாகவே
மாறியவே!
மனமாம்பா லாழியில் மாலா யசைந்திடும் மந்தரத்மத்
தினதுக டைதலில் சீர்த்தநின் புன்னகைத் தேசமுதை.
புனலனின் முக்கண்கள் போற்றிப் பருகிப் புசிக்கநலந்
தனதலைக் கொந்தாகும் தாய்த்திரு காமாட்சி! தாந்திரிந்தே!
மால்-ஆசை;
சீர்த்த-சிறந்த; தேசு-ஒளி; புனலன் - புனலணிந்த சிவன்; நலம்-இன்பம்; கொந்து-கூட்டம்;
திரள்; திரிந்து-மாறி;
பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):
மனமாம்
பாலாழியில் மாலாய் அசைந்திடும் மந்தரத் மத்தினது கடைதலில் சீர்த்த நின் புன்னகைத் தேசு
அமுதை., புனலனின் முக்கண்கள் போற்றிப் பருகிப் புசிக்க, நலந்தனதன் அலைக் கொந்தாகும்
தாய்த் திருகாமாட்சி! தாந்திரிந்தே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam