ऐक्यं येन विरच्यते हरतनौ दम्भावपुम्भावयो
रेखा यत्कचसीम्नि शेखरदशां नैशाकरी गाहते ।
औन्नत्यं परमेति येन स महान्मेनासखः सानुमान्
कम्पातीरविहारिणा सशरणास्तेनैव धाम्ना वयम् ॥ १३॥
ஐக்யம் யேன விரச்யதே ஹரதனௌ த³ம்பா⁴வபும் பா⁴வயோ
ரேகா² யத்கச ஸீம்னி ஶேக²ரத³ஶாம் நைஶாகரீ கா³ஹதே ।
ஔன்னத்யம் பரமேதி யேன ஸ மஹான் மேனாஸக:² ஸானுமான்
கம்பாதீர விஹாரிணா ஸஶரணா: தேனைவ தா⁴ம்னா வயம் ॥ 13॥
கம்பைக் கரையில் உலாவும் ஒரு பேரொளியால்
நாம் காக்கப்படுகிறோம்; அதுவே பரமசிவனது உடலில் பெண், ஆண் என்ற இரண்டையும் ஒன்றாக இணைத்தது;
அதன் கூந்தலில் சந்திரனுடைய கலை சிகரம் போலானது; அதனால், மேனையைத் துணைவியாய் கொண்ட
மேருவும் உயர்வைப் பெற்றது!
கம்பைத் தடமேவும் காந்தியொன் றேநமைக் காக்குமாமவ்
விம்பமே பெண்ணொடு
வேறின்றி
ஆணையும் வீங்கிணைத்தாம்;
அம்புலி யின்கலை அம்மௌலி யாமதன் அங்குழலில்;
அம்மேனை ஆட்டிகொள் ஆமேரு வும்பெறும் ஆங்குயர்வே!
விம்பம்-உருவு; வீங்கு-நெருங்கு;
மெளலி-சிகரம், உச்சி; அங்குழல்-அழகு கேசம்; அம்-அந்த; ஆட்டி-மனைவி;
பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):
கம்பைத் தடமேவும் காந்தியொன்றே நமைக்
காக்குமாம் அவ்விம்பமே பெண்ணொடு
வேறின்றி ஆணையும் வீங்கிணைத்தாம்; அம்புலியின் கலை அம்
மௌலியாமதன் அங்குழலில்; அம்மேனை ஆட்டிகொள் ஆ மேருவும் பெறும் ஆங்குயர்வே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam