மார்ச் 25, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 85

सूतिः श्वेतिमकन्दलस्य वसतिः शृङ्गारसारश्रियः
पूर्तिः सूक्तिझरीरसस्य लहरी कारुण्यपाथोनिधेः
वाटी काचन कौसुमी मधुरिमस्वाराज्यलक्ष्म्यास्तव
श्रीकामाक्षि ममास्तु मङ्गलकरी हासप्रभाचातुरी ८५॥

ஸூதி: ஶ்வேதிம கந்த³லஸ்ய வஸதி: ஶ்ருʼங்கா³ர ஸாரஶ்ரிய:
பூர்தி: ஸூக்தி ரீ ரஸஸ்ய லஹரீ காருண்ய பாதோ²னிதே:
வாடீ காசன கௌஸுமீ மதுரிம ஸ்வாராஜ்ய லக்ஷ்ம்யாஸ்தவ
ஸ்ரீகாமாக்ஷி மமாஸ்து மங்க³லகரீ ஹாஸ ப்ரபாசாதுரீ 85

ஸ்ரீகாமாக்ஷி! உன் புன்னகை அழகு, வெண்மை துளிர்க்குமிடம்; சிருங்கார சாரத்தின் இருப்பிடம்; இன்மொழியெனும் அருவிப் பெருக்கும், கருணைக் கடலின் அலைபெருக்கும் உள்ள இடம்; இனிமையெனும் பேரரசின் இலக்குமி உலவும் சிறந்த பூஞ்சோலை; அது எனக்கு மங்களமே நல்கட்டும்.

மின்சிதத் தூவல் மிளிரிடம் சிங்காரம் வீறுமிடம்
இன்மொழி வாரியின் ஏற்றமும் தண்ணளி ஈண்டுநீர
தன்னலை ஏற்றமும் தங்கிடும் இன்னர சாட்சியாக்கத்
தின்பூஞ்சோ லையாமுன் தீம்நகை காமாட்சி செய்கசுவே!

சிதம்-வெண்மை; தூவல்-துளிர்; வீறு- கம்பீரமாய் வீற்றிருக்கும்; வாரி-அருவி; ஏற்றம்-பெருக்கு; தண்ணளி-கருணை; ஈண்டுநீர்-கடல்; ஆக்கம்-இலக்குமி; தீம்-இனிய; சு-மங்களம்!

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


மின்சிதத் தூவல் மிளிரிடம், சிங்காரம் வீறுமிடம், இன்மொழி வாரியின் ஏற்றமும் தண்ணளி ஈண்டுநீரதன் அலை ஏற்றமும் தங்கிடும் இன் அரசாட்சி ஆக்கத்தின் பூஞ்சோலையாம் உன் தீம்நகை காமாட்சி செய்க சு வே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...