மார்ச் 26, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 86

उत्तुङ्गस्तनमण्डलस्य विलसल्लावण्यलीलानटी-
रङ्गस्य स्फुटमूर्ध्वसीमनि मुहुः प्राकाश्यमभ्येयुषी
श्रीकामाक्षि तव स्मितद्युतिततिर्बिम्बोष्ठकान्त्यङ्कुरैः
चित्रां विद्रुममुद्रितां वितनुते मौक्तीं वितानश्रियम् ८६॥

உத்துங்க³ ஸ்தன மண்ட³லஸ்ய விலஸல்லாவண்ய லீலா நடீ-
ரங்க³ஸ்ய ஸ்பு²ட மூர்த்வஸீமனி முஹு: ப்ராகாஶ்யமப்யேயுஷீ
ஸ்ரீகாமாக்ஷி தவ ஸ்மிதத்³யுதிததி: பி³ம்போ³ஷ்ட²காந்த்யங்குரை:
சித்ராம் வித்³ரும முத்³ரிதாம் விதனுதே மௌக்தீம் விதானஶ்ரியம் 86

ஸ்ரீ காமாக்ஷி! ஒளிரழகாம் நர்த்தகியின் நடன அரங்காம் மேடிட்ட மார்பகங்களின் மேற்பகுதியில் அடிக்கடி உலவி அங்கு தெளிந்த ஒளியைப் பரப்பும் உனது புன்சிரிப்பின் ஒளியலை கோவைப்பழம் போன்ற உதட்டின் ஒளியுடன் இணைந்து, பவழக்கொடியோடு கூடிய அழகு முத்துபந்தலென்னும் தோற்றத்தை விளைவிக்கிறது!

அழகுலீ லையாகும் ஆடற்பெண் ணாளின் அரங்கமார்பாம்
அழகுமீ தூர்ந்து அடிக்கடி ஆங்குதெள் அஞ்சுபாவும்
அழகுன் நகையின் அரியலைக் கொவ்வை அதரவம்ப
வழக்கொடி சேரார மந்தல்போல், காமாட்சி வாகுவன்றே!

ஆடற்பெண்-நடனமாது; ஊர்ந்து-உலவி; தெள்-தெளிந்த; அஞ்சு-ஒளி; பாவும்-பரவும்; அரி-ஒளி; கொவ்வை-கோவைப்பழம்; அதரம்-உதடு; அம்-ஒளி; வல்லி-கொடி; ஆரம்-முத்து; மந்தல்-பந்தல்; வாகு-அழகு

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):


அழகு லீலையாகும் ஆடற் பெண்ணாளின் அரங்க மார்பாம் அழகு மீதூர்ந்து அடிக்கடி ஆங்குதெள் அஞ்சு பாவும், அழகுன் நகையின் அரி அலைக் கொவ்வை அதர அம் பவழக்கொடி சேர் ஆர மந்தல்போல், காமாட்சி வாகுவன்றே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...