किं त्रैस्रोतसमम्बिके परिणतं स्रोतश्चतुर्थं नवं
पीयूषस्य समस्ततापहरणं किंवा द्वितीयं वपुः ।
किंस्विन्नै कटिकं गिरो मधुरिमाभ्यासाय न(ग)व्यं पयः
कामाक्षि! स्मरशासनप्रियतमे मन्दस्मितं तावकम् ॥ ८३॥
கிம் த்ரைஸ்ரோதஸமம்பி³கே பரிணதம் ஸ்ரோதஶ்சதுர்த²ம் நவம்
பீயூஷஸ்ய ஸமஸ்த தாப ஹரணம் கிம் வா த்³விதீயம் வபு: ।
கிம்ஸ்விந்நைகடிகம் கி³ரோ மது⁴ரிமாப்⁴யாஸாய ந(க³)வ்யம் பய:
*காமாக்ஷி! ஸ்மர ஶாஸன ப்ரியதமே மந்த³ஸ்மிதம் தாவகம் ॥ 83॥
*श्रीकाञ्चीपुरनायक/ஸ்ரீகாஞ்சீபுரனாயக என்றும் பாடம்!
தாயே! மாரவைரியின்
மனைவி காமாக்ஷி! உன் புன்னகை, இதுவரை வான், நிலம், பாதாளம் என்று பெருகியோடும் கங்கையின்
நான்காம் பெருக்கோ? அனைத்து இதயதாபங்களை நீக்கிடும் அமுதின் இரண்டாம் உருவோ? உன் வாக்கினிமையை
கற்க அருகமர்ந்த புதுப்பாலோ?
காமன் பகைமனை காமாட்சி! உன்மென்ன கைப்பெருக்கு
வாமன் சிரகங்கை வாரிகள் மூன்றின்பின் வாரிநான்கோ?
மாமைய னைத்தும் மனத்தி லகற்றும் மதுவிரண்டோ?
தேமது ரச்சொற்கள் தேர்ச்சிக் கருகமர் சீரமன்றே?
வாமன்-சிவன்; வாரிகள்-வழிகள்;
மாமை-துன்பம்; மது-அமுதம்; சீரம்-பால்
பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):
காமன்பகை மனை காமாட்சி! உன் மென்னகைப் பெருக்கு,
வாமன் சிரகங்கை வாரிகள் மூன்றின்பின் வாரிநான்கோ? மாமை அனைத்தும் மனத்தில் அகற்றும்
மதுவிரண்டோ? தேமதுரச் சொற்கள் தேர்ச்சிக்கு அருகமர் சீரமன்றே?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam