श्रीकामाक्षि भवप्रिये मृदुवचस्सौरभ्यमुद्रास्पदं
प्रौढप्रेमलतानवीनकुसुमं मन्दस्मितं तावकम् ।
मन्दं कन्दलति प्रियस्य वदनालोके समाभाषणे
श्लक्ष्णे कुड्मलति प्ररूढपुलके चाश्लोषणे फुल्लति ॥ ८२॥
ஸ்ரீகாமாக்ஷி! பவப்ரியே! ம்ருʼது³வசஸ் ஸௌரப்⁴ய முத்³ராஸ்பத³ம்
ப்ரௌட⁴ப்ரேம லதா நவீன குஸுமம் மந்த³ஸ்மிதம் தாவகம் ।
மந்த³ம் கந்த³லதி ப்ரியஸ்ய வத³னாலோகே ஸமாபா⁴ஷணே
ஶ்லக்ஷ்ணே குட்மலதி ப்ரரூட⁴புலகே சாஶ்லோஷணே பு²ல்லதி ॥ 82॥
*श्रीकाञ्चीपुरदेवते/ஸ்ரீகாஞ்சீபுரதே³வதே!
சிவனுக்கினியாளே!
ஸ்ரீகாமாக்ஷி! மென்மையான சொற்களின் மணத்துக்கு இருப்பிடமும், முதிர்ந்த அன்புக்கொடியில்
பூத்த புதுமலராகவும் உள்ள உன் புன்சிரிப்பானது,
கணவரைக் காண்கையில் துளிர்த்து, இனிமையான உரையாடலில் அரும்பி, உணர்வு மிகுந்து
மயிர்க்கூச்செரிந்து அணைக்கையில் மலர்கிறது!!
மென்சொற்கள் நாற்றம் விளங்கும் முதிர்ந்த விருப்பவல்லி
மின்னிப்பூக் கும்புது மென்மல ராகுமுன் மென்னகைதன்
இன்பரைக் காண எதிர்ந்து, அரும்பாகி இன்மொழியில்,
தன்தழு வற்கூச்சில் தான்பூக்கும் காமாட்சி! தாணுவன்பே!
நாற்றம்-மணம்; விருப்பம்-அன்பு;
வல்லி-கொடி; இன்பர்-கணவர்; எதிர்ந்து-துளிர்த்து; கூச்சு-மயிர்கூச்சம்; தாணு-சிவன்.
பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):
மென்சொற்கள் நாற்றம்
விளங்கும் முதிர்ந்த விருப்ப வல்லி மின்னிப் பூக்கும் புது மென் மலராகும் உன் மென்னகை
தன் இன்பரைக் காண எதிர்ந்து, அரும்பாகி இன்மொழியில், தன் தழுவற்
கூச்சில்தான் பூக்கும் காமாட்சி! தாணுவன்பே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam