अश्रान्तं परतन्त्रितः पशुपतिस्त्वन्मन्दहासाङ्कुरैः
श्रीकामाक्षि तदीयवर्णसमतासङ्गेन शङ्कामहे ।
इन्दुं नाकधुनीं च शेखरयते मालां च धत्ते नवैः
वैकुण्ठैरवकुण्ठनं च कुरुते धूलीचयैर्भास्मनैः ॥ ८१॥
அஶ்ராந்தம் பரதந்த்ரித: பஶுபதி: த்வன் மந்த³ஹாஸாங்குரை:
ஸ்ரீகாமாக்ஷி! ததீ³ய வர்ண ஸமதா ஸங்கே³ன ஶங்காமஹே ।
இந்து³ம் நாகது⁴னீம் ச ஶேக²ரயதே மாலாம் ச த⁴த்தே நவை:
வைகுண்டை²ரவகுண்ட²னம் ச குருதே தூ⁴லீ சயைர் பா⁴ஸ்மனை: ॥ 81॥
ஸ்ரீகாமாக்ஷி! எப்போதும் உன்
மென்னகை முளைகளால் பரவசனாக்கப்பட்ட பசுபதியானவர், அந்த மென்னகை நிறத்துக்கு ஒப்ப நிறமாயின,
என்பதால், சந்திரனையும், கங்கையையும் சூடிக்கொண்டு, புதிதான பிரம கபாலங்களாலான மாலையையும்
தரித்துக்கொள்ளுகிறான்; சாம்பற் புழுதிக்கூட்ட்டத்தை தனது உடல் முழுவதும் பூசிக்கொள்ளுக்கிறார்.
உன்மென் நகைமுளை ஒன்றால் உவந்த உமேசனாரம்
மென்நகை வண்ண மிகுவொப் பதால்சிர மீதரியும்
இன்னறு கங்கையும் ஈன்றான்க பால இலம்பகமும்
தன்மீது காமாட்சி! சாம்பரை யுந்தான் தரித்தனனே!
உமேசனார்-பசுபதியார்; அரி-சந்திரன்;
நறு-மணமிகு; ஈன்றான்-பிரமன்; இலம்பகம்-மாலை; சாம்பர்-விபூதி
பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):
உன் மென்நகை முளை ஒன்றால் உவந்த
உமேசனா அம்மென் நகை வண்ண மிகு ஒப்பதால் சிர மீது அரியும், இன்னறு கங்கையும்
ஈன்றான் கபால இலம்பகமும் தன்மீது காமாட்சி! சாம்பரையுந்தான் தரித்தனனே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam