ज्योत्स्ना किं तनुते फलं तनुमतामौष्ण्यप्रशान्तिं विना
त्वन्मन्दस्मितरोचिषा तनुमतां कामाक्षि रोचिष्णुना ।
सन्तापोऽपि निवार्यते नववच: [यः] प्राचुर्यमङ्कूर्यते
सौन्दर्यं परिपूर्यते जगति सा कीर्तिश्च संचार्यते ॥ ७२॥
ஜ்யோத்ஸ்னா கிம் தனுதே ப²லம் தனுமதா மௌஷ்ண்ய ப்ரஶாந்திம் வினா
த்வன் மந்த³ஸ்மித ரோசிஷா தனுமதாம் காமாக்ஷி ரோசிஷ்ணுனா ।
ஸந்தா போऽபி நிவார்யதே நவவச: [ய:] ப்ராசுர்ய மங்கூர்யதே
ஸௌந்த³ர்யம் பரிபூர்யதே ஜக³தி ஸா கீர்திஶ்ச ஸம்சார்யதே ॥ 72॥
காமாக்ஷீ!
நிலவால், வெப்பத்தைத் தணிப்பதைத் தவிர வேறென்ன பயனாம் உலகோர்க்கு? உன்புன்னகைக் காந்தியோ
உலகோர் தாபம் தணிக்கிறது; என்றும் புதிதாய் பேசுந்திறன் தருகிறது; அழகால் நிரப்புகிறது;
உயர்ந்த புகழை உலகெங்கும் பரவும்படி செய்துவிடுகிறது; ஆதலின் உன் மந்தகாசமே நிலவைவிட
உயர்ந்தென்பதில் என்ன இருவேறு கருத்துக்கள் இருக்கமுடியும்?
நிலவினா லாறென் நிதாகம் உலகோர்க்கு நீக்குவதின்?
உலகோர்குத் தாபம் உடன்நீக்கி, வேறாய உத்திவாக்கை
துலங்கவுந் தந்து ,சுபம்நிறைத் துப்,பூவில் சொல்தரவும்,
மலர்மென் நகையினும் மற்றேதாம் காமாட்சீ மாநிலத்தே!
ஆறு-பயன்;
நிதாகம்-வெப்பம்; வேறாய-புதிதாய; உத்தி-பேச்சு; சுபம்-புகழ்; பூ-உலகு; சொல்-புகழ்;
பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):
நிலவினால்
ஆறு என்? நிதாகம் உலகோர்க்கு நீக்குவதின்! உலகோர்குத் தாபம் உடன் நீக்கி, வேறாய உத்திவாக்கை,
துலங்கவுந் தந்து, சுபம் நிறைத்துப்,பூவில் சொல்தரவும், மலர் மென்நகையினும் மற்று ஏதாம் காமாட்சீ மாநிலத்தே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam