மார்ச் 11, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 71

श्रीकामाक्षि मनोज्ञमन्दहसितज्योतिष्प्ररोहे तव
स्फीतश्वेतिमसार्वभौमसरणिप्रागल्भ्यमभ्येयुषि
चन्द्रोऽयं युवराजतां कलयते चेटीधुरं चन्द्रिका
*गङ्गा सा सुधाझरी सहचरीसाधर्म्यमालम्बते ७१॥

ஸ்ரீகாமாக்ஷி! மனோஜ்ஞ மந்த³ஹஸித ஜ்யோதிஷ் ப்ரரோஹே தவ
ஸ்பீ²்வேதிம ஸார்வபௌம ஸரணி ப்ராக³ல்ப்ய மப்யேயுஷி
சந்த்³ரோயம் யுவராஜதாம் கலயதே சேடீதுரம் சந்த்³ரிகா
*கங்கா ஸா ஸுதாஜ்ஜரீ ஸஹசரீ ஸாதர்ம்ய மாலம்ப³தே 71

* शुद्धा / ஶுத்³தா⁴ - என்றும் பாடமுண்டு!

ஸ்ரீ காமாக்ஷி! மனங்கவர் உன் புன்னகையாம் ஒளிக்கொழுந்து, செழும் வெண்மையின் மேன்மைகொண்ட ஆட்சியின் திறத்தை அடைகையில், இச்சந்திரன் இளவரசனாகிறான்; நிலவு தாசியின் பொறுப்பையும், அமுதப்பெருக்குடைய அந்த கங்கையும் உயிர்த்தோழியின் முறையையும் அடைகின்றன.

மனமீர்க்குன் மென்னகை வாட்கண்ணி, சீர்த்தவெண் மைச்சிறப்பை
தனதாய்கொள் ஆள்கைய தன்வீற்றை கொள்கையில் தண்ணவன
வனுமி ளவரசாம்; வான்நிலா தாசியாம்; வாரியமு
தனையகங் கையும் சகியென்ற, காமாட்சீ, தன்மையதே!

ஈர்க்கும்-கவரும்; வாள்-ஒளி; கண்ணி-கொழுந்து; சீர்த்த-செழுமையான; ஆள்கை-ஆட்சி; வீறு-திறமை; தண்ணவன்-சந்திரன்; தாசி-வேலைக்காரி; வாரி-பெருக்கு;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு)


மனம் ஈர்க்கும் உன் மென்னகை வாள் கண்ணி, சீர்த்த வெண்மைச் சிறப்பை தனதாய்கொள் ஆள்கையதன் வீற்றை கொள்கையில் தண்ணவன் அவனும் இளவரசாம்; வான்நிலா தாசியாம்; வாரியமுது அனைய கங்கையும் சகியென்ற, காமாட்சீ, தன்மையதே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...