மார்ச் 09, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 69

शैत्यप्रक्रममाश्रितोऽपि नमतां जाड्यप्रथां धूनयन्
रागव्यञ्जन पेसलोऽपि गिरिजे! वैमल्यमुल्लासयन्।
लीलालापपुरस्सरोऽपि सततं वाचंयमान्प्रीणयन्
कामाक्षि स्मितरोचिषां तव समुल्लासः कथं वर्ण्यते ६९॥

ஶைத்ய ப்ரக்ரம மாஶ்ரிதோபி நமதாம் ஜாட்³ய ப்ரதா²ம் தூனயன்
ராக வ்யஞ்சன பேசலோபி கிரிஜே! வைமல்ய முல்லாஸயந்
லீலாலாப புரஸ்ஸரோபி ஸததம் வாசம்யமான் ப்ரீணயன்
காமாக்ஷி! ஸ்மிதரோசிஷாம் தவ ஸமுல்லாஸ: கத²ம் வர்ண்யதே 69

*नैर्मल्यं परमं गतोऽपि गिरिशं रागाकुलं चारयन् / நைர்மல்யம் பரமம் ³தோபி கி³ரிஶம் ராகா³குலம் சாரயன்

மலைமகளே! காமாக்ஷீ! மிக்க குளிர்ச்சி உடையது, ஆயின் வணங்கியவர்க்கு அதுவற்ற சடத்தன்மையை (அறிவின்மை) நீக்குவது; அன்பின் நிறமாம் செம்மையை வெளிக்காட்டுவது, ஆயின் நிறமற்ற நிர்மல நிலையைக் காட்டுவது; விளையாட்டாய் அரட்டை அடிப்பது, ஆயின் மவுன இயல்பினரை மகிழ்விப்பது, என்று ஒன்றுக்கொன்று எதிர்செயல்களை செய்யும் உன் புன்னகையின் விளையாட்டுகளை எப்படி வர்ணிப்பதோ?

மலைமகள் காமாட்சீ! வர்ணிப்ப தென்னாமுன் மாயமுறு
வலின்கேளி? சீதமே வாய்ந்தும் சடம்நீக்கும் வாழ்த்தினார்க்கு!
கலந்த சிவப்பால் கனிந்தாலும் காட்டுமே கௌரமதை!
விலாசமாய் பேச்சு விழைந்தும்மோ னர்க்கும் விலாசமாமே!

கேளி-விளையாட்டு; சீதம்-குளிர்ச்சி; சடம்-அறியாமை; கௌரம்-வெண்மை; விலாசம்-விளையாட்டு; மோனர்-மௌன ஞானியர்; விலாசம்-மகிழ்ச்சி;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு)


மலைமகள் காமாட்சீ! வர்ணிப்பதென்னாம் உன் மாய முறுவலின் கேளி? சீதமே வாய்ந்தும் சடம் நீக்கும் வாழ்த்தினார்க்கு; கலந்த சிவப்பால் கனிந்தாலும் காட்டுமே கௌரமதும்; விலாசமாய் பேச்சு விழைந்தும் மோனர்க்கும் விலாசமாமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...