क्षीराब्धेरपि शैलराजतनये त्वन्मन्दहासस्य च
श्रीकामाक्षि वलक्षिमोदयनिधेः किंचिद्भिदां ब्रूमहे ।
एकस्मै पुरुषाय देवि स ददौ लक्ष्मीं कदाचित्पुरा
सर्वेभ्योऽपि ददात्यसौ तु सततं लक्ष्मीं च वागीश्वरीम् ॥ ६७॥
க்ஷீராப்³தே⁴ரபி ஶைலராஜ தனயே த்வன் மந்த³ஹாஸஸ்ய ச
ஸ்ரீ காமாக்ஷி வலக்ஷிமோத³யனிதே:⁴ கிம்சித்³பி⁴தா³ம் ப்³ரூமஹே ।
ஏகஸ்மை புருஷாய தே³வி ஸ த³தௌ³ லக்ஷ்மீம் கதா³சித் புரா
ஸர்வேப்⁴யோऽபி த³தா³த்யஸௌ து ஸததம் லக்ஷ்மீம் ச வாகீ³ஶ்வரீம் ॥ 67॥
மலையரசன் மகளே! ஸ்ரீ காமாக்ஷியே! வெண்மைக்கு இருப்பிடமான பாற்கடலுக்கும் உன் புன்சிரிப்புக்குமுள்ள
வேற்றுமையைக் சிறிது சொல்லுகிறோம். அப்பாற்கடல் முன்பொரு நேரம் ஒருவனுக்கு லட்சுமியைக்
கொடுத்தது. இப்புன்சிரிப்போ, எப்போதும் எல்லோருக்கும் செல்வத்தையும் வித்தையையும் கொடுக்கிறது.
மலைராசன் பெண்ணே!கா மாட்சியே வெண்மை மருவியாங்கு
நிலைபாற் கடலுக்கும், நின்மூர லுக்கும் நிறையபேதம்!
சலசையை முன்னர் சகந்நாதர்க் கீந்ததச் சாகரமாம்!
வலநிதி, வித்தைதாம் மந்த சிரிப்பினால் வாய்குமன்றே!
மருவி-கலந்து;
மூரல்-மென்னகை; பேதம்-வேற்றுமை; சலசை-இலக்குமி; சகந்நாதர்-விஷ்ணு; சாகரம்-கடல்; வலநிதி-
பெருமைக்குரிய செல்வம்;
பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு)
மலைராசன் பெண்ணே! காமாட்சியே வெண்மை மருவியாங்கு, நிலை பாற் கடலுக்கும், நின் மூரலுக்கும் நிறையபேதம்! சலசையை முன்னர் சகந்நாதர்க் கீந்ததச் சாகரமாம்! வலநிதி, வித்தைதாம் மந்த சிரிப்பினால் வாய்குமன்றே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam