श्रीकामाक्षि तव स्मितद्युतिझरीवैदग्ध्यलीलायितं
पश्यन्तोऽपि निरन्तरं सुविमलंमान्या जगन्मण्डले ।
लोकं हासयितुं किमर्थमनिशं प्राकाश्यमातन्वते
मन्दाक्षं विरहय्य वस्तुविभवो मन्दारचन्द्रादयः ॥ ६६॥
ஸ்ரீகாமாக்ஷி தவ ஸ்மித த்³யுதிஜ்ஜரீ வைத³க்³த்⁴ய லீலாயிதம்
பஶ்யந்தோऽபி நிரந்தரம் ஸுவிமலம் மான்யா ஜக³ன்மண்ட³லே ।
லோகம் ஹாஸயிதும் கிமர்த²மனிஶம் ப்ராகாஶ்ய மாதன்வதே
மந்தா³க்ஷம் விரஹய்ய வஸ்துவிப⁴வோ மந்தா³ர சந்த்³ராத³ய: ॥ 66॥
मङ्गलतरं/மங்க³லதரம் - என்றும் பாடம்;
ஸ்ரீகாமாக்ஷி! உலகிலே
உன்னதப் பொருட்களென்னும் மாண்பைப் பெற்றவையாம் மந்தார மலரும், மதியும் எப்போதும் உன்
தூய மந்தகாசக் கதிர்பெருக்கின் அழகை காண்பவர்களாக இருந்தும், உலகெலாம் சிரிக்க ஏன்
வெட்கத்தை விட்டு எப்போதும் வெளிப்படுகிறார்கள்?
“விரஹய்ய மங்கலதரம்”
என்னும் பாடத்தில் மங்களகரமான வெட்கத்தை விட்டு என்ற பொருள் வருவது ஒப்புக்கொள்ளக்கூடிய
ஒன்றே. அம்மையிலிருந்து வரும் மந்தகாசமும் பெண்மைக் குறியீடாகையால், அதற்கு நாணமும்
மங்களமல்லவோ?
உலகிலே உன்னத ஒண்ணிவை என்னும் உறையுறையாம்
மலர்மந் தரமும் மதியுமென் றும்நின்தூ மந்தகாசம்
உலவு கதிரின் உவட்டத்தைக் கண்டும் உலகினர்ந
கலவுமேன் நாணற்று காமாட்சி போந்தென்றும் காண்பதற்கே!
உன்னத-உயர்வு; ஒண்-ஒளி/ஓட்பம்;
உறை-பெருமை; உறை-பொருள்; - உவட்டு-பெருக்கு; நகலவும்-பரிகசிக்கவும் போந்து-வெளிவந்து;
பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு)
உலகிலே உன்னத ஒண்ணிவை
என்னும் உறையுறையாம் மலர் மந்தரமும் மதியுமென்றும் நின் தூ மந்தகாசம் உலவு கதிரின்
உவட்டத்தைக் கண்டும் உலகினர் நகலவுமேன் நாணற்று காமாட்சி போந்தென்றும் காண்பதற்கே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam