மார்ச் 05, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 65

मुक्तानां परिमोचनं विदधतस्तत्प्रीतिनिष्पादिनी
भूयो दूरत एव धूतमरुतस्तत्पालनं तन्वती
उद्भूतस्य जलान्तरादविरतं तद्दूरतां जग्मुषी
कामाक्षि स्मितमञ्जरी तव कथं कम्बोस्तुलामश्नुते ६५॥

முக்தாநாம் பரிமோசனம் வித³த: தத்ப்ரீதி நிஷ்பாதி³னீ
பூயோ தூ³ரத ஏவ தூதமருதஸ் தத்பாலனம் தன்வதீ
உத்³பூதஸ்ய ஜலாந்தராத³விரதம் தத்³தூ³ரதாம் ஜக்³முஷீ
காமாக்ஷி ஸ்மிதமஞ்ஜரீ தவ கத²ம் கம்போ³ஸ்துலாமஶ்னுதே 65

காமாக்ஷியே! முத்தனுக்கு விடுதலையைத் தருவதும், அடிக்கடி காற்றுகளாம் தேவதைகளை தூரத்தில் தள்ளுவதும், நீர் நடுவே தோன்றும் சங்குடன், முத்தர்களுக்கு உவகையளிப்பதும், தேவதைகளைக் காப்பதும், சடர்களை விட்டு விலகியிருப்பதுமான உன் புன்னகைப் பூங்கொத்து எவ்வாறு சமநிலை பெறமுடியும்?

முத்தருக்கு விடுதலையென்பது சரியே? முத்துக்கு? புன்னகைக் காந்தி முத்துக்களின் ஒளிக்கு வேலையில்லாமல் செய்கிறதே! அதனால்தான்! இந்த ஸ்லோகத்தில் உள்ள சிலேடைப் பதங்களை தமிழிலே அவ்வாறே செய்வது கடினம்தான்!  மூகர் செய்திருக்கும் சிலேடைப் பதங்களைப் பார்க்கலாம்!

முத்து- முத்தருக்கு முத்தியும், மகிழ்வும் எப்படி ஒரே சமயத்தில்?
மருத்து - காற்றை தள்ளுவதும், தேவர்களைக் காப்பதும் எப்படி?
ஜடம்- சங்கு/மூடர்களாம் அறிவிலிகள்;

சலம்தோன்றும், தள்ளும் சலனனைத் தூரம், சலசமதன்
நிலைமுத்தி ஈயும், நிறைமுத் தருக்கு நிறைவிலாழ்த்தும்,
நலமதை தேக்கெலாம் நல்குமாம், மூடர் நணுகிடாநின்
வலமூரல் கண்ணிகா மாட்சீ! பெறல்ச மமெவ்விதமே?

சலம்-நீர்; சலனன்-காற்று; சலசம்-முத்து; நிலைமுத்தி-விடுதலை; முத்தர்-முக்தர்; நிறைவு-மகிழ்ச்சி/உவகை; தே-தேவதைகள்; நணுகிட-நெருங்கிடா; வல-வலிமை; மூரல்-மென்னகை; கண்ணி-பூங்கொத்து;  சலம்தோன்றி-சங்கு

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு)

சலம்தோன்றும், தள்ளும் சலனனைத் தூரம், சலசமதன் நிலைமுத்தி ஈயும், நிறை முத்தருக்கு நிறைவிலாழ்த்தும், நலமதை தேக்கெலாம் நல்குமாம், மூடர் நணுகிடா நின் வலமூரல் கண்ணி, காமாட்சீ! பெறல் சமம் எவ்விதமே?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...