மார்ச் 04, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 64


नम्रस्य प्रणयप्ररोह​कलहच्छेदाय पादाब्जयोः
मन्दं चन्द्रकिशोरशेखरमणेः कामाक्षि रागेण ते
बन्धूकप्रसवश्रियं जितवतो बंहीयसीं तादृशीं
बिम्बोष्ठस्य रुचिं निरस्य हसितज्योत्स्ना वयस्यायते ६४॥

நம்ரஸ்ய ப்ரணயப்ரரோஹகலஹச்சே²தா³ பாதா³ப்³ஜயோ:
மந்த³ம் சந்த்³ரகிஶோரஶேக²ரமணே: காமாக்ஷி ராகே³ தே
³ந்தூகப்ரஸவஶ்ரியம் ஜிதவதோ ³ம்ஹீயஸீம் தாத்³ருʼஶீம்
பி³ம்போ³ஷ்ட²ஸ்ய ருசிம் நிரஸ்ய ஹஸிதஜ்யோத்ஸ்னா வயஸ்யாயதே 64

காமாக்ஷியே! அன்பின் காரணத்தால் வளர்ந்திருக்கும் ஊடலைப் போக்கத் தாமரைப்போலாம் நின் பாதங்களில் மெல்ல வந்து வணங்கிய இளம்பிறையை மணிமுடியாய் தரித்தவர்க்கு, உனது புன்னகையெனும் வெண்ணிலவு, செந்நிறத்தால் செம்பரத்தம் பூவின் அழகை வென்ற கோவைப் பழம்போன்ற உதடுகளின் மிகுந்த ஒளியை குறைத்து, தோழியாகிறது.

உவகை யிலோங்குமாம் ஊடல் தணித்திட ஓச்சிகஞ்சச்
சிவப்படி கள்போற்றும் திங்கள்பூண், காமாட்சீ, சித்தருக்கு
சிவப்பால் பரத்தம்பூ  தீத்திவெல் கோவைபோல் செவ்வுதட்டின்
சவிபூக்க நின்மந் தகாசவல் லோனாம் சகியெனவே!

உவகை-அன்பு; ஓங்கு-வளர்; ஊடல்-பிரணய கலகம்; ஓச்சி-மெல்ல/பைய; கஞ்சம்-தாமரை; சிவப்படிகள் - சிவந்த அடிகள்; போற்றும்-வணங்கும்; திங்கள்பூண் சித்தர்-சிவன்; பரத்தம்பூ-செம்பரத்தை; தீத்தி-ஒளி; சவி-ஒளி; பூக்க-மங்க; அல்லோன்- சந்திரன்; ஆம்- ஆவான்; சகி-தோழி;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு)

உவகையில் ஓங்குமாம் ஊடல் தணித்திட, ஓச்சி கஞ்சச்சிவப்படிகள் போற்றும் திங்கள் பூண், காமாட்சீ, சித்தருக்கு சிவப்பால் பரத்தம்பூ  தீத்தி வெல் கோவைபோல் செவ்வுதட்டின் சவிபூக்க நின் மந்தகாச அல்லோன் ஆம் சகியெனவே!


பிற்சேர்க்கை:
ஊடல் நேரத்தே புன்னகைக்காமல், செம்பரத்தம் பூபோல் சிவந்த உதட்டினைக் கோபக்குறியாக கவி கூறுகிறார். கோபத்தில் முகம் சிவப்பதும் இயல்பே. சந்திரசேகரர் அதைத் தணிக்க வணங்குகையில், தேவி புரியும் மந்தஹாசம்த்தால், ஊடல் தீர்ந்ததாகவும், அதைத் தீர்த்த புன்னகையைத் தோழியாகவும் நினைக்கிறார் சிவன்.  புன்னகை வருகையில், உதடுகள் பிரிந்து சிவப்பு நிறம் ஒளி குன்றுவதால், “ருசிம் நிரஸ்ய” என்று கூறுகிறார் கவி. இந்த கற்பனையின் அழகே அழகு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...