மார்ச் 03, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 63

त्वन्मन्दस्मितमञ्जरीं प्रसृमरां कामाक्षि चन्द्रातपं
सन्तः सन्ततमामनन्त्यमलता तल्लक्षणं लक्ष्यते
यन्नासौ विधुनोति ताप्मधिकं नाभ्यन्तरं मानस​
ध्वान्तं तत्खलु दुःखिनो वयमिदं केनोति नो विद्महे ६३॥

த்வன் மந்த³ஸ்மித மஞ்ஜரீம் ப்ரஸ்ருʼமராம் காமாக்ஷி சந்த்³ராதபம்
ஸந்த: ஸந்ததமாமனந்த்யமலதா தல்லக்ஷணம் லக்ஷ்யதே
*யந்நாஸௌ விடுனோதி தாபமதிகம் நாப்யந்தரம் மாநஸ
த்வாந்தம் தத்க²லு து:³கி²னோ **வயமமீ கேனேதி ஜானீமஹே 63

* अस्माकं धुनोति तापकमधिकं धूनोति नाभ्यन्तरं/அஸ்மாகம் துனோதி தாபகமதிகம் தூனோதி நாப்யந்தரம் என்றும் பாடமுண்டு.
** वयमिदं केनोति नो विद्महे/வயமிதம் கேனோதி நோ விந்தாஹே என்றும் பாடமுண்டு.

காமாக்ஷீ எங்கும் பரவும் இயல்புள்ள உன் புன்னகைப் பூங்கொத்தை, நிலவு என்பர் பெரியோர். அதன் குறியாக தூய்மையாம் வெண்மை அதில் காண்கிறதே! ஆனால் அது எங்கள் உள்ளத்தில் மிக்குள்ள தாபத்தையும் உள்ளத்தில் இருளையும் நீக்குவதில்லையே! ஏனென்று, துயருற்ற நாங்கள் அறியோம்!

மதியென்பர் எங்கும் மருவுமுன் புன்னகை மஞ்சரியை
முதுவோரும்; காமாட்சீ! முன்குறி யாகும் முருந்ததுவும்;
அதுவாயின் எங்கள் அகத்துள் மிகுதாபம், அல்லகற்றா
ததுவுமேன் என்றே தவிக்கிறோம் துன்பிலே தாயவளே!

மருவும்-கலந்திருக்கும்; மஞ்சரி-பூங்கொத்து; முதுவோர்-பெரியோர்;அறிஞர்; முன்குறி-முன்பாய் தெரியும் அறிகுறி; முருந்து-வெண்மை; அல்- இருள்;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு)

மதியென்பர் எங்கும் மருவுமுன் புன்னகை மஞ்சரியை முதுவோரும்; காமாட்சீ! முன்குறி யாகும் முருந்ததுவும்; அதுவாயின் எங்கள் அகத்துள் மிகுதாபம், அல் அகற்றாததுவும் ஏன் என்றே தவிக்கிறோம் துன்பிலே தாயவளே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...