பிப்ரவரி 21, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 53

वैशद्येन विश्वतापहरणक्रीडापटीयस्तया
पाण्डित्येन पचेलिमेन जगतां नेत्रोत्सवोत्पादेन
कामाक्षि स्मितकन्दलैस्तव तुलामारोढुमुद्योगिनी
ज्योत्स्नासौ जलराशिपोषणतया दूष्यां प्रपन्ना दशाम् ॥५३॥

வைஶத்³யேன விஶ்வ தாப ஹரண க்ரீடா³ படீயஸ்தயா
பாண்டி³த்யேன பசேலிமேன ஜக³தாம் நேத்ரோத்ஸவோத் பாதே³
காமாக்ஷி ஸ்மித கந்த³லைஸ்தவ துலாமாரோடுமுத்³யோகி³னீ
ஜ்யோத்ஸ்னாஸௌ ஜலராஶி போஷணதயா தூ³ஷ்யாம் ப்ரபன்னா ³ஶாம் 53

காமாக்ஷி! வெண்மையாலும், உலகின் தாபமகற்றும் விளையாட்டில் திறமையாலும், உலகோர் கண்களுக்கு இன்பம் தருவதில் பழுத்த அறிவுடைத்திருப்பதினாலும், உன்புன் சிரிப்புபோடு சமமென்ற நிலையடைய முயற்சிக்கும் நிலவானது,  அறிவிலிகளை முழுநிலவன்று வளர்ப்பதால், இகழத்தக்க நிலையை அடைந்துவிட்டது.

வெண்மையால், ஞாலத்தின் வெப்புநீக் கும்கேளி வின்னியாச
ஒண்மையால், ஞால ஒளிக்கண் களுக்கின்பம் ஓக்குஞானத்
திண்மையால் உன்புன் சிரிப்பொக்க ஊன்னிக்கும் திங்களது
மண்ணாந்தைக் கூட்டம் வளர்த்துகா மாட்சீ! மடங்கியதே!

ஞாலம்-உலகம்; வெப்பு-தாபம்; கேளி-விளையாட்டு, வின்னியாச-திறமை; ஒண்மை -நிறைவு; ஓக்குதல்-தருவது; ஞானத்திண்மை-பழுத்த அறிவு; உன்னித்தல்-முயற்சித்தல்; திங்கள்-நிலவு; மண்ணாந்தை-அறிவிலிகள்; மடங்குதல்-இகழப்படல்

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு)

வெண்மையால், ஞாலத்தின் வெப்பு நீக்கும் கேளி வின்னியாச ஒண்மையால், ஞால ஒளிக்கண்களுக்கு இன்பம் ஓக்குஞானத் திண்மையால், உன் புன்சிரிப்பு ஒக்க ஊன்னிக்கும் திங்களது, மண்ணாந்தைக் கூட்டம் வளர்த்து காமாட்சீ! மடங்கியதே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...