लावण्याम्बुजिनीमृणालवलयैः शृङ्गारगन्धद्विप-
ग्रामण्यः श्रुतिचामरैस्तरुणिमस्वाराज्यतेजोङ्कुरैः ।
आनन्दामृतसिन्धुवीचिपृषतैरास्याब्जहंसैस्तव
श्रीकामाक्षि मथान मन्दहसितैर्मत्कं मनःकल्मषम् ॥ ५४॥
லாவண்யாம்பு³ஜினீ ம்ருʼணால வலயை: ஶ்ருʼங்கா³ர கர்ஜத் க³ந்த⁴ த்³விப-
க்³ராமண்ய: ஶ்ருதிசாமரைஸ்தருணிம
ஸ்வாராஜ்ய பீஜாங்குரை: ।
ஆனந்தா³ம்ருʼத ஸிந்து⁴ வீசி ப்ருʼஷதை: ஆராஸ்யாப்³ஜ ஹம்ஸைஸ்தவ
ஸ்ரீகாமாக்ஷி! மதா²ன மந்த³ஹஸிதைர்: மத்கம் மன:கல்மஷம் ॥ 54॥
ஸ்ரீகாமாக்ஷியே! அழகு தாமரை தண்டுகளாயும், சிருங்காரம் என்னும் பிளிறும் சிறந்த
யானையில் காதுகளாம் சாமரங்களாயும், இளமையெனும் தன்னாட்சி வித்துக்களின் முளைகளாயும்,
மகிழ்வெனும் அமுதக் கடலலைத் துளிகளாகவும், முகமெனும் தாமரையைச் சுற்றும் அன்னங்களுமான
உன் புன்சிரிப்புகளால் என் மனத்திருக்கும் அழுக்கைப் போக்கடிப்பாயாக.
அழகும ரைத்தண்டாம், ஆசையாம்
சீருடை ஆர்க்குமானை
குழைச்சா மரங்களாம், கொம்மைதன்
னாட்சிக்காழ் கோலரமாம்,
விழுவமு தக்கடற் மிக்கார்ப்பின்
துள்ளியாம், விந்தமுற்றும்
அழகோதி யுன்மூரல், அட்டைக்கா
மாட்சி அழிக்குமுள்ளே!
மரை-தாமரை; ஆசை-காமம்/சிருங்காரம்;
ஆர்ப்பு-பேரொலி/மகிழ்ச்சி; குழை-காது; கொம்மை-இளமை; காழ்-வித்து/விதை; கோலரம்-முளைகள்;
விந்தம்-தாமரை; முற்றும்- சூழும்; ஓதி-அன்னம்; மூரல்-புன்சிரிப்பு; அட்டு-அழுக்கு;
உள்-உள்ளம்
பொருள் விளங்கப் படிக்குமாறு:
(அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு)
அழகு மரைத் தண்டாம், ஆசையாம் சீருடை ஆர்க்கும் ஆனை குழைச் சாமரங்களாம், கொம்மை
தன்னாட்சிக் காழ் கோலரமாம், விழு அமுதக்கடற் மிக்க ஆர்ப்பின் துள்ளியாம், விந்தம் முற்றும்
அழகு ஓதி, உன் மூரல், அட்டைக் காமாட்சி அழிக்குமுள்ளே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam