பிப்ரவரி 20, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 52

कर्पूरद्युतितस्करेण महसा कल्माषयत्याननं
श्रीकामाक्षि शिवप्रिये 1 पतिरिव श्रीमन्दहासोऽपि ते
आलिङ्गत्यतिपीवरां स्तनतटीं बिम्बाधरं चुम्बति
प्रौढं रागभरं व्यनक्ति मनसो धैर्यं धुनीतेतराम् ५२॥

கர்பூர த்³யுதி தஸ்கரேண மஹஸா கல்மாஷயத்யானனம்
ஸ்ரீகாமாக்ஷீ! ஶிவப்ரியே1 பதிரிவ ஸ்ரீமந்த³ஹாஸோபி தே
ஆலிங்க³த்யதிபீவராம் ஸ்தன தடீம் பி³ம்பா³ரம் சும்ப³தி
ப்ரௌடம் ராக³ரம் வ்யனக்தி மனஸோ தைர்யம் துனீதே தராம் 52

1  श्रीकाञ्चिपुरिनायिके /ஸ்ரீகாஞ்சீபுரனாயிகே என்றும் பாடம்

ஶிவனுக்கு இனியவளே! திரு காமாக்ஷியே! உன் நாயகனைப்போன்றாம் உன் புன்சிரிப்பும், கற்பூரத்தின் காந்தியைக் கவரும் தன்னொளியால், முகத்தை வெளிர்நிறமாக்குகிறது. மிகப்பருத்த தனங்களை அணைத்துக்கொள்கிறது. கோவைக்கனிபோலாம் கீழுதட்டை முத்தமிடுகிறது. மிகுந்த உவகையைக் வெளிக்காட்டுகிறது. மனதின் திடத்தையும் உலுக்கிக் குலைக்கிறதே!

சிவர்க்கினி யே,காமாட் சீ!நாதன் போல்பூரத் தின்கதிரைக்
கவர்புன் னகைமுகக் காந்திமாற் றும்;பூண்கொண் கையிரண்டும்,
உவந்தணைக் கும்;முத்தம் உன்கோவைப் போல்கீழ் உதட்டிலிடும்;
உவகை மிகக்காட்டும்; உள்ளத்திண் மையும் உலைக்கிறதே

பூரம்-கற்பூரம்; கதிர், காந்தி-ஓளி; பூண்-அணி; திண்மை-திடம்;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு)


சிவர்க்கினியே, காமாட்சீ! நாதன்போல் பூரத்தின் கதிரைக் கவர் புன்னகை, முகக்காந்தி மாற்றும்; பூண் கொங்கையிரண்டும், உவந்தணைக்கும்; முத்தம் உன் கோவைப்போல் கீழ்உதட்டிலிடும்; உவகை மிகக்காட்டும்; உள்ளத் திண்மையும் உலைக்கிறதே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...