व्यापारं चतुराननैकविहृतौ व्याकुर्वती कुर्वती
रुद्राक्षग्रहणं करेण सततं वागूर्मिकल्लोलिता ।
उत्फुल्लं धवलारविन्दमधरीकृत्य स्फुरन्ती सदा
श्रीकामाक्षि सरस्वती विजयते त्वन्मन्दहासप्रभा ॥ ५१॥
வ்யாபாரம் சதுரானனைக விஹ்ருʼதௌ வ்யாகுர்வதீ குர்வதீ
ருத்³ராக்ஷ க்³ரஹணம் கரேண மஹேஶி ஸததம் வாகூ³ர்மி கல்லோலிதா ।
உத்பு²ல்லம் த⁴வலாரவிந்த³ மத⁴ரீக்ருʼத்ய ஸ்பு²ரந்தீ ஸதா³
ஸ்ரீ காமாக்ஷி! ஸரஸ்வதீ விஜயதே த்வன்மந்த³ஹாஸ ப்ரபா⁴ ॥ 51॥
ஸ்ரீ காமாக்ஷியே! நான்முகனின்
ஒரு வாக்விலாசமான அழகிய முகத்தில் மட்டும் தன் திறனைக் காட்டுபவளும், எப்போதும் அக்க
மாலையைக் கையில் ஏந்தியவளும், எப்போதும் பேச்சலையால் அலைக்கப்பட்டவளும், மலர்ந்த வெண்டாமரையை
ஆசனமாகி அதன்மேல் விளங்கும் சரசுவதியாக உன் மென்னகை ஒளி உள்ளதே!
நான்முகன் பால்களி நன்கு திறனாய் நடத்துவாளாம்,
தான்கை யிலேயக்கத் தாலாய மாலை தரித்தவளாம்,
தான்பேச் சலையால தைத்த
லுடைத்தவெண் தாமரைப்பூ
மேன்விளங் கும்வாணி மென்னகை,
காமாட்சீ, மின்னுனதே!
களி-விளையாட்டு; அக்கமாலை-உருத்திராக்க மாலை; அதைத்தல்-அலைதல்; மின்-ஒளி;
பொருள் விளங்கப் படிக்குமாறு:
(அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு)
நான்முகன்பால் களி நன்கு
திறனாய் நடத்துவாளாம், தான்கையிலே அக்கத்தால் ஆய மாலை தரித்தவளாம், தான் பேச்சலையால் அதைத்தல்
உடைத்த, வெண் தாமரைப் பூமேன் விளங்கும் வாணி மென்னகை, காமாட்சீ, மின் உனதே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam