आशङ्के तव मन्दहासलहरीमन्यादृशीं चन्द्रिकां
एकाम्रेशकुटुम्बिनि प्रतिपदं यस्याः प्रभासंगमे ।
वक्षोजाम्बुरुहे न ते रचयतः कांचिद्दशां कौङ्मली-
मास्याम्भोरुहमम्ब किंच शनकैरालम्बते फुल्लताम् ॥ ४६॥
ஆஶங்கே தவ மந்த³ஹாஸ லஹரீ மன்யாத்³ருʼஶீம் சந்த்³ரிகாம்
ஏகாம்ரேஶ குடும்பி³னி! ப்ரதிபத³ம் யஸ்யா: ப்ரபா⁴-ஸம்க³மே! ।
வக்ஷோஜாம்பு³ருஹே ந தே ரஹ(ச)யத: காம்சித்³ த³ஶாம் கௌங்மலீம்
ஆஸ்யாம்போ⁴ருஹமம்ப³ கிம்ச ஶனகைராலம்ப³தே பு²ல்லதாம் ॥ 46॥
ஏகாம்ர நாதரின்
பத்தினியாம் தாய் காமாட்சீ! உன் புன்னகைப் பெருக்கை அவ்வப்போது ஒப்பற்ற சந்திரனாகக்
கருதுகிறேன். அப்புன்னகையின் ஒளிச்சேர்க்கையில் உன் தனங்களாம் தாமரைகளும் மொட்டாகவே
உள்ளன; ஆனால் உன்முகத்தாமரையோ மெல்ல மலர்கிறதே!
தாமரைகள் சூரியனைக்
கண்டு மலர்ந்த அழகு கூடும்; நிலவொளியில் கூம்பி அழகை இழந்துவிடும். ஆனால் அம்மையின்
தனங்களோ மொட்டாவும் அழகை இழப்பதில்லை என்று கூறும்விதமாக “ந தே ரசயதே” என்று ஒரு பாடமுண்டு.
உன்புன்ன கையலை ஒப்பிலா ஒன்றென உன்னுகிறேன்!
அன்னகை ஒள்ளிலே அங்கலி கள்மொட்டாய் ஆகுமாயின்
உன்முகத் தாமரை ஒன்றதோ மெல்லவே ஊழ்த்தலுறல்
என்முரண்? காமாட்சீ! ஏகாம்ர நாயகி ஏந்திழையே!
உன்னுதல்-எண்ணுதல்; ஒள்-ஒளி;
அங்கலிகள்-கொங்கைகள்; ஊழ்த்தல்-மலர்தல்;
பொருள் விளங்கப் படிக்குமாறு:
(அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு)
உன் புன்னகை அலை ஒப்பிலா
ஒன்றென உன்னுகிறேன்! அந் நகை ஒள்ளிலே அங்கலிகள் மொட்டாய் ஆகும்; ஆயின் உன்முகத் தாமரை
ஒன்றதோ மெல்லவே ஊழ்த்தலுறல் என் முரண்! காமாட்சீ! ஏகாம்ர நாயகி ஏந்திழையே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam