पीयूषं खलु पीयते सुरजनैर्दुग्धाम्बुधिर्मथ्यते
माहेशैश्च जटाकलापनिगडैर्मन्दाकिनी नह्यते ।
शीतांशुः परिभूयते च तमसा तस्मादनेतादृशी
कामाक्षि स्मितमञ्जरी तव वचोवैदग्ध्यमुल्लङ्घते ॥ ४५॥
பீயூஷம் க²லு பீயதே ஸுரஜனைர் து³க்³தா⁴ம்பு³தி⁴ர் மத்²யதே
மாஹேஶைஶ்ச ஜடா-கலாப-நிக³டை³ர் மந்தா³கினீ நஹ்யதே ।
ஶீதாம்ஶு: பரிபூ⁴யதே ச தமஸா தஸ்மாத³னேதாத்³ருʼஶீ
காமாக்ஷி ஸ்மிதமஞ்ஜரீ தவ வசோ வைத³க்³த்⁴ய முல்லங்க⁴தே ॥ 45॥
காமாக்ஷீ! அமரரால் அமுதம்
பருகப்படுகிறது! பாற்கடலோ கடையப்படுகிறது! கங்கையோ பரமசிவனின் சடைகளாம் விலங்குகளால்
கட்டப்படுகிறது! சந்திரனோ இருட்டால் (ராகு) அவமதிக்கப்படுகிறது! இத்துன்பங்களெல்லாம் இல்லாதுள்ளது, உன் புன்சிரிப்பாம்
பூங்கொத்து! ஆகையால், அதன் சிறப்பு, சொற்றிறம் கடந்துள்ளதே!
புன்சிரிப்போடு ஒப்பு
செய்யப்படும், அமுதம் பருகப்படுவதும், பாற்கடல் கடையப்படுவதும், கங்கைப் பெருக்கு,
சிவனார் சடையில் தளைக்கு ஆட்படுவதும், சந்திரன் இராகுவால் விழுங்கப்படுவதும், துன்பங்களன்றோ!
அத்துன்பேதும் இல்லாமல், அன்னையின் புன்சிரிப்பு, அவள் அதரங்களைப் பூங்கொத்தாய் அலங்கரிக்கும்
இன்பைப் பெற்றதன்றோ?
அமுதம் விருந்தாம் அமரர்க்கு;
மத்தால் அமுதகமும்
அமரர் கடைவதாம்; ஆலன்
சடையினில் ஆட்படுவாள்
விமலை; நிலவோ விருள்வாயில்;
காமாட்சீ! வேதையிலுன்
குமிழ்நகைக் கண்ணிவாக்
கும்வெல்லும் தன்மையைக் கொண்டதன்றே!
அமரர்-தேவர்; மத்து-கடைவான்;
அமுதகம்-பாற்கடல்; ஆலன் - ஆலமுண்டவன்/ஆல்கீழோன்; விமலை-கங்கை; இருள்-இராகு; வேதை-வேதனை;
கண்ணி-பூங்கொத்து;
பொருள் விளங்கப் படிக்குமாறு:
(அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு)
அமுதம் விருந்தாம் அமரர்க்கு; மத்தால் அமுதகமும் அமரர் கடைவதாம்; ஆலன் சடையினில்
ஆட்படுவாள் விமலை; நிலவோ விருள்வாயில்; காமாட்சீ! வேதை இல் உன் குமிழ்நகைக் கண்ணி வாக்கும்வெல்லும்
தன்மையைக் கொண்டதன்றே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam