பிப்ரவரி 10, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 42

कामाक्षि स्मितमञ्जरीं तव भजे यस्यास्त्विषामङ्कुरा-
नापीनस्तनपानलालसतया निश्शङ्कमङ्केशयः
ऊर्ध्वं वीक्ष्य विकर्षति प्रसृमरानुद्दामया शुण्डया
सूनुसुते बिसशङ्कयाशु कुहनादन्तावलग्रामणीः ४२॥

காமாக்ஷி ஸ்மித மஞ்ஜரீம் தவ ஜே யஸ்யாஸ்த்விஷாமங்குரா-
நாபீன ஸ்தன பான லாலஸதயா நிஶ்ஶங்கமங்கேஶய:
ஊர்த்வம் வீக்ஷ்ய விகர்ஷதி ப்ரஸ்ருʼமரானுத்³தா³மயா ஶுண்ட³யா
ஸூனுஸுதே பி³ஸ ஶங்கயாஶு குஹனா த³ந்தாவல க்³ராமணீ: 42

காமாக்ஷீ! நின் பருத்த தனங்களில் பெருகும் பாலை அருந்த கூச்சமின்றி மடியில் படுத்துக்கொண்டிருக்கும் உன் பாலகனான மாயைவல்ல ஆனமுகன் எந்த புன்சிரிப்பின் ஒளிக்கிரணங்களைத் தாமரைத்தண்டு என்னும் ஐயத்தில் நீண்ட தும்பிக்கையினால் வேகமாக இழுக்க விரும்புகிறானோ அப்பூங்கொத்தை துதிக்கிறேன்.

பருத்த தனங்களின் பாசப்பெ ருக்காமுன் பாலருந்த
விரும்புபா லன்வேழோன் வெட்காதும் மேல்மடி வீழுகையில்
அரியாம்நின் மென்னகை அங்கயத் தண்டெனும் ஐயமாயைங்
கரத்தால் இழுக்குமக் கண்ணியை காமாட்சீ கைதொழுமே!

வேழோன்-விநாயகன்; அரி-ஒளி; அங்கயம்-தாமரை; ஐங்கரம்-தும்பிக்கை; கண்ணி-பூங்கொத்து!

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு)


பருத்த தனங்களின் பாசப் பெருக்காம் உன் பால் அருந்த விரும்பு பாலன் வேழோன் வெட்காது உம்மேல் மடி வீழுகையில் அரியாம் நின் மென்னகை அங்கயத் தண்டெனும் ஐயமாய், ஐங்கரத்தால் இழுக்கும் அக்கண்ணியை, காமாட்சீ கைதொழுமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...