பிப்ரவரி 09, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 41

मानग्रन्थिविधुन्तुदेन रभसादास्वाद्यमाने नव-
प्रेमाडम्बरपूर्णिमाहिमकरे कामाक्षि ते तत्क्षणम्
आलोक्य स्मितचन्द्रिकां मुहुरिमामुन्मीलनं जग्मुषीं
चेतः शीलयते चकोरचरितं चन्द्रार्धचूडामणेः ४१॥

மானக்³ரந்தி²விதுந்துதே³ ரபஸாதா³ஸ்வாத்³யமானே நவ-
ப்ரேமாட³ம்ப³ரபூர்ணிமாஹிமகரே காமாக்ஷி! தே தத்க்ஷணம்
ஆலோக்ய ஸ்மித சந்த்³ரிகாம் முஹுரிமாமுன் மீலனம் ஜக்³முஷீம்
சேத: ஶீலயதே சகோர சரிதம் சந்த்³ரார்தசூடா³மணே: 41

காமாக்ஷீ! புதிய காதலின் ஆடம்பரமாம் முழுநிலவு, தன்மான இராகுவால் விழுங்கப்படும்போது, சந்திரக்கலையை சூடாமணியாகக் கொண்ட பரமசிவனாரின் மனம், மீண்டும் மலர்ந்து கொண்டிருக்கும் உன் முறுவலாம் வெண்ணிலவைக் கண்டு, சகோரப் பறவையின் செயலை தாம் செய்து (நிலவின் கதிர்களை உண்டு) களிக்கிறது.

நவவன்பின் ஓர்மையாம் நாடறி வானதம்மை நாணரவன்
உவந்துண்ணும் போது ஒளிகலை யைச்சூடா ஓண்மணியாய்
நிவந்தார்தம் உள்ளம், ஞெகிழ்வெண் நிலவன்ன நின்நகையைக்
கவர்தல், சகோரம்போல், காமாட்சீ! செய்து களிக்கிறதே!

நவ-புதிய; ஓர்மை-ஆடம்பரம்; நாடறிவான்-சந்திரன்; நாணரவன் - தன்மானம் உள்ள அரவம் (இராகு); ஒளிகலை-பிறைச்சந்திரன்; நிவந்தார்-கொண்டவர்; ஞெகிழ்-மலர்; கவர்தல்-உண்ணல்;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு)


நவ அன்பின் ஓர்மையாம் நாடறிவான்தம்மை நாண் அரவன் (இராகு) உவந்து உண்ணும்போது ஒளிகலையைச் சூடாஓண்மணியாய் நிவந்தார்தம் உள்ளம், ஞெகிழ் வெண்நிலவன்ன நின்நகையைக் கவர்தல் சகோரம்போல், காமாட்சீ! செய்து, களிக்கிறதே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...