பிப்ரவரி 08, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 40

ज्योत्स्नाकान्तिभिरेव निर्मलतरं नैशाकरं मण्डलं
हंसैरेव शरद्विलाससमये व्याकोचमम्भोरुहम्
स्वच्छैरेव विकस्वरैरुडुगुणैः कामाक्षि बिम्बं दिवः
पुण्यैरेव मृदुस्मितैस्तव मुखं पुष्णाति शोभाभरम् ४०॥

ஜ்யோத்ஸ்னா காந்திபிரேவ நிர்மலதரம் நைஶாகரம் மண்ட³லம்
ஹம்ஸைரேவ ஶரத்³வி(கா)லாஸ ஸமயே வ்யாகோசமம்போருஹம்
ஸ்வச்சை²ரேவ விகஸ்வரைருடு³கு³ணை: காமாக்ஷி பி³ம்ப³ம் தி³:
புண்யைரேவ ம்ருʼது³ஸ்மிதை ஸ்தவ முக²ம் புஷ்ணாதி ஶோபாரம் 40

காமாக்ஷீ! சரத்கால அழகு வெளியாகும் நேரத்தே, தூய்மையின் வடிவாம் சந்திர மண்டலம் நிலவொளியாலும், மலர்ந்த தாமரைகள், அன்னங்களாலும், வான்வெளியானது மாசற்ற வான்மீன்களாலும், ஒளி பெறுகின்றன. ஆனால் உன்முகமோ புனித உன்மென்னகைகளாலேயே மிகவும் அழகடைகிறது!

சரத்கால காந்தி சமயத்தே தூய்மையின் சந்தமாம்சந்
திரக்கூட்டம் சோமத் தியுதியா லும்மலர்ச் சீதளங்கள்
வரடங் களினாலும் வான்மீன்க ளால்விண்ணும் வாகுறுமாம்;
வரியுன் முகமோகா மாட்சிதூ மென்னகை வாகினாலே!

சந்தமாம்-தூய்மையாம்;  சோமன்-நிலவு; தியுதி-ஒளி; சீதளங்கள்-தாமரைகள்; வரடங்கள்-அன்னங்கள்; வான்மீன்-நட்சத்திரம்; வாகு-ஓளி;அழகு; வரி;அழகு; தூ-தூய/புனித;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு)

சரத்கால காந்தி சமயத்தே தூய்மையின் சந்தமாம் சந்திரக்கூட்டம் சோமத் தியுதியாலும், மலர்ச் சீதளங்கள் வரடங்களினாலும் வான்மீன்களால் விண்ணும் வாகுறுமாம்; வரியுன் முகமோ காமாட்சி தூ மென்னகை வாகினாலே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...