பிப்ரவரி 07, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 39

क्षुण्णं केनचिदेव धीरमनसा कुत्रापि नानाजनैः
कर्मग्रन्थिनियन्त्रितैरसुगमं कामाक्षि सामान्यतः
मुग्धैर्द्रुष्टुमशक्यमेव मनसा मूढसय मे चक्षुषो
मार्गं दर्शयतु प्रदीप इव ते मन्दस्मितश्रीरियम् ३९॥

க்ஷுண்ணம் கேனசிதே³ தீரமனஸா குத்ராபி நானாஜனை:
கர்மக்³ரந்தி² நியந்த்ரிதைரஸுக³மம் காமாக்ஷி ஸாமான்யத:
முக்³தைர் த்³ருஷ்டுமஶக்யமேவ மனஸா மூடஸ் மே சக்ஷுஷோ
மார்க³ம் ³ர்ஶயது ப்ரதீ³ இவ தே மந்த³ஸ்மித ஸ்ரீரியம் 39

காமாக்ஷீ! ஏங்கோ, எவனோ ஒரு தீர மனத்தனால் மட்டும் பழக்கப்பட்டதும், கருமக் கட்டுண்ட பலரும் எளிதில் செல்லமுடியாததும், அறிவிலிகளால் அறியமுடியாததுமான முத்தி வழியை உன்னிந்தப் புன்சிரிப்பின் ஒளி, பெரிய விளக்காய் மூடனான என் கண்களுக்குக் காண்பிக்கட்டும்!

எவரோயெங் கோவாழ், இதயத்தில் தீரர், இலகடையும்,
பவக்கரு மக்கட்டில் பட்டோர்க் கெளிதாய் படரவொண்ணா,
சுவாவியர் தேர்கிலா சோற்றாற்றை உன்றனிச் சோதிநகை,
சவித்தீயாய் காமாட்சீ தாகாண கண்கட்கிச் சப்பரைக்கே!

இலகு-எளிதாய்; பவக்கருமம்-பவவினை; பட்டோர்-உழலுவோர்; படர்-அடைதல்; சுவாவியர்-அறிவிலிகள்; தேர்கிலா-அறியமுடியா; சோறு-முத்தி; ஆறு-வழி; சோதிநகை-ஒளிநகை; சவி-ஒளி; தீ-தீபம்; சப்பரை-மூடன்.

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு)

எவரோ, எங்கோ வாழ், இதயத்தில் தீரர், இலகடையும், பவக் கருமக் கட்டில் பட்டோர்க்கு எளிதாய் படரவொண்ணா, சுவாவியர் தேர்கிலா சோற்றாற்றை உன்றனிச் சோதி நகை, சவித் தீயாய் காமாட்சீ தா! காண கண்கட்கு இச்சப்பரைக்கே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...