பிப்ரவரி 06, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 38

कामाक्षि प्रथमानविभ्रमनिधिः कन्दर्पदर्पप्रसूः
मुग्धस्ते मृदुहास एव गिरिजे मुष्णातु मे किल्बिषम्
यं द्रष्टुं विहिते करग्रह उमे शम्भुस्त्रपामीलितं
स्वैरं कारयति स्म ताण्डवविनोदानन्दिना तण्डुना ३८॥

காமாக்ஷி ப்ரத²மான-விப்ரம-நிதி: கந்த³ர்ப-த³ர்ப-ப்ரஸூ:
முக்³ஸ்தே ம்ருʼது³ஹாஸ ஏவ கி³ரிஜே முஷ்ணாது மே கில்பி³ஷம்
யம் த்³ரஷ்டும் விஹிதே கரக்³ரஹ உமே! ஶம்புஸ்த்ரபா-மீலிதம்
ஸ்வைரம் காரயதி ஸ்ம தாண்ட³வ-வினோதா³னந்தி³னா தண்டு³னா 38


மலைமகளே! உமையே! காமாக்ஷி! மணங்கொள்ளும் நேரத்திலும், நாணத்தால் வெளியே வராத எப்புன்சிரிப்பை, சம்புவானவர் நடனமாடுவதில் மிகவும் விருப்புள்ளவரான நந்திகேசுவரரை ஆடச்செய்து கொண்டுவந்தாரோ, அப்புகழ்வாய்ந்த அழகு நிதிக்கிருப்பிடமும், மாரனுக்கு கருவம் தருவிப்பதுமான, அப்புன்னகை, எனது பாபத்தை நீக்கட்டும்.

மலைம களுமைகா மாட்சி!நா ணத்தால், மணம்பெறுமந்
நிலையிலும் வாராத நின்மென் நகைக்காய், நிருத்தமெனுங்
கலைநந்தி யாடவும் கண்ணுத லார்செய்தார்! காமவேட்குத்
தலையாட்டம் செய்யுமச் சாய்நகை நீக்கட்டும் சாவரமே!   

தலையாட்டம்-கருவம்; சாய்-புகழ்; சாவரம்-பாவம்;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு)


மலைமகள், உமை காமாட்சி! நாணத்தால், மணம் பெறும் அந்நிலையிலும் வாராத நின்மென் நகைக்காய், நிருத்தமெனுங் கலை நந்தியாடவும் கண்ணுதலார் செய்தார்! காமவேட்குத் தலையாட்டம் செய்யும் அச்சாய்நகை நீக்கட்டும் சாவரமே!  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...