नम्राणां नगराजशेखरसुते नाकालयानां पुरः
कामाक्षि त्वरया विपत्प्रशमेन कारुण्यधाराः किरन् ।
आगच्छन्तमनुग्रहं प्रकटयन्नानन्दबीजानि ते
नासीरे मृदुहास एव तनुते नाथे सुधाशीतलः ॥ ३७॥
நம்ராணாம் நக³ராஜ ஶேக²ர ஸுதே நாகாலயாநாம் புர:
காமாக்ஷி த்வரயா விபத் ப்ரஶமேன காருண்யதா⁴ரா: கிரன் ।
ஆக³ச்ச²ந்தமனுக்³ரஹம் ப்ரகடயன்னானந்த³பீ³ஜானி தே
நாஸீரே ம்ருʼது³ஹாஸ ஏவ தனுதே நாதே² ஸுதா⁴ ஶீதல: ॥ 37॥
மலைப் பேரரசரின்
மகளே! உலகைக் காப்பவளே! காமாக்ஷி! உன்முன் வணங்கி நிற்கும் தேவர்களின் துன்பங்களை நீக்குவதில்
வேகமாகக் கருணை மழையைப் பொழிவதும், பின் வரவிருக்கும் அருளை முன்னரே அறிவிப்பதும்,
அமுதம்போல் குளிர்ந்ததுமான உன்னழகு மென்னகையே மகிழ்ச்சியின் விதைகளை விதைக்கின்றது.
மலைராசன் பெண்ணாளே! வைப்பினைக் காக்கும்கா
மாட்சி!யுன்முன்
தலைவணங் கும்தேவர் தாபங்கள் நீக்க
தயைமழைபெய்
தலாம்,வருஞ் சாயல் தனைக்காட் டுமாம்பயத்
தண்ணழகுன்
நிலைமென் நகைவித்தாய் நெஞ்சில் விதைக்கும்
நிறைவினையே!
வைப்பு-உலகம்;
தாபம்-துன்பம்; தயை-கருணை; சாயல்-அருள்; பயம்-அமுதம்; தண்-குளிர்வு; நிறைவு-ஆனந்தம்
பொருள் விளங்கப் படிக்குமாறு:
(அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு):
மலைராசன் பெண்ணாளே!
வைப்பினைக் காக்கும் காமாட்சி! உன்முன் தலை வணங்கும் தேவர் தாபங்கள் நீக்க தயைமழை பெய்தலாம்,
வரும் சாயல்தனைக் காட்டுமாம், பயத் தண்ணழகு உன் நிலை மென்நகை வித்தாய் நெஞ்சில் விதைக்கும்
நிறைவினையே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam