பிப்ரவரி 04, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 36

दुष्कर्मार्कनिसर्गकर्कशमहस्सम्पर्कतपप्तं मिलत्
पङकं शङ्करवल्लभे मम मनः कामाक्षि काञ्चीश्वरि।
अम्ब त्वन्मृदुलस्मितामृतरसे मङ्क्त्वा विधूय व्यथां
आनन्दोदयसौधशृङ्गपदवीमारोढुमाकाङ्क्षति ३६॥ 

து³ஷ்கர்மார்க-நிஸர்க³ கர்கஶ மஹஸ்ஸம்பர்க தப்தம் மிலத்-
பங்கம் ஶங்கர வல்லபே மம மன: காமாக்ஷி காஞ்சீஶ்வரி*
அம்ப³! த்வன் ம்ருʼது³ல ஸ்மிதாம்ருத ரஸே மங்க்த்வா விதூ வ்யதா²ம்
ஆனந்தோ³³ய ஸௌதஶ்ருʼங்க³ பத³வீமாரோடுமா காங்க்ஷதி 36

*-காஞ்சிபுராலங்க்ரியே என்றும் பாடம் உண்டு.

சங்கரர்க்கினியாளே! காஞ்சியின் இறைவியே! தாயே! காமாக்ஷி! தீவினைகளாம் கதிரவனின் இயல்பான, கொடுங் கதிர்க்கூட்டால் தாபமுற்றதும், பாவச்சேறு படிந்ததுமாமென் மனது, உன் மென்னகையாம் அமுதச் சாறதில் முழுகி, இளைப்பாறி, ஆனந்தமுதிக்கும் மாடமாம் உயரிடத்திற்கு ஏறிட விரும்புகிறது.

தீவினை யாமற்கன் சீர்கொடும் கால்களால் சேர்ந்துழலும்,
பாவம் அழறாய்ப் படிந்தவென் உள்ளம், பயத்தெளிவாய்
மேவும்ந கையில் விடாய்நீங்கி, ஆனந்த வேயுளேறக்
காவும்தாய் காமாட்சீ! காஞ்சிதே வீசங் கரர்க்கினியே!

அற்கன்-சூரியன்; சீர்-இயல்பு; கால்கள்-கதிர்கள்; உழல்-தாபம்; அழறு-சேறு; பயம்-அமுதம்; தெளிவு-சாறு; விடாய்-களைப்பு; வேயுள்-மேன்மாடம்; காவும்-விரும்பும்/இச்சை கொள்ளும்;

பொருள் விளங்கப் படிக்குமாறு: (அரும்பதச் சொற்களுக்குப் பொருளிட்டு)


தீவினையாம் அற்கன் சீர் கொடும் கால்களால் சேர்ந்து உழலும், பாவம் அழறாய்ப் படிந்த என் உள்ளம், பயத் தெளிவாய் மேவும் நகையில் விடாய்நீங்கி, ஆனந்த வேயுளேறக் காவும், தாய் காமாட்சீ! காஞ்சி தேவீ! சங்கரர்க்கினியே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...