ஜனவரி 19, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 20

वक्त्रेन्दोस्तव चन्द्रिका स्मितरुचि र्वल्गु स्फुरन्ती सतां
स्याच्चेद्युक्तिमिदं चकोरमनसां कामाक्षि कौतूहलम्
एतच्चित्रमहर्निशं यदधिकामेषा रुचिं गाहते
बिम्बोष्ठद्युमणिप्रभास्वपि यद्बिब्बोकमालम्बते २०॥

வக்த்ரேந்தோ³ஸ் தவ சந்த்³ரிகா ஸ்மிதருசி: வல்கு³ ஸ்பு²ரந்தீ ஸதாம்
ஸ்யாச் சேத்³ யுக்திமித³ம் சகோர மனஸாம் காமாக்ஷி கௌதூஹலம்
ஏதச் சித்ரமஹர்னிஶம் யத³திகா மேஷா ருசிம் கா³ஹதே
பி³ம்போ³ஷ்ட² த்³யு மணி ப்ரபாஸ்வபி யத்³பி³ப்³ வோகமாலம்ப³தே 20

காமாக்ஷியே! உனது புன்சிரிப்பின் ஒளி, முகமாம் நிலவின் சந்திரனாகி, அழகாக ஒளிர்வதுடன், சகோரப் பறவையின் அன்புள்ளம் கொண்ட நல்லோர்களுக்கு மனமகிழ்வை தருவது சரியே!  ஆயின் இரவும் பகலும் மிக்க ஒளி அடைவதும், கோவைக்கனிபோன்ற உதடுகளாம் சூரியனுடைய ஒளியிருக்கும்போதும் கிளர்வடைகிறது என்பது விந்தையே!

முகமாம் நிலவில் முகிழ்கதி ராம்நின் முறுவலொளி
சகோரம்போல் அன்புடை, சச்சனர்க் கின்பம் தரல்முறையாம்!
பகலிர வும்மிக பக்கமும், கோவைப்போல் பாலிகையாம்
பகலோன் ஒளியிலும் பைம்பல்கொள் காமாட்சீ, பாங்கதென்னே!


முகிழ்-பூத்தல்; முறுவல்-புன்னகை; சச்சனர்-நல்லோர்; பக்கம்-ஒளி; பாலிகை-உதடு; பைம்பல்-களிப்பு - பாங்கதென்னே - பாங்கை விந்தைக்கொள்ளும் வியப்பு!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...