ஜனவரி 18, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 19

आरुढा रभसात्पुरः पुररिपोराश्लेषणोपक्रमे
या ते मातरुपैति दिव्यतटिनीशङ्काकरी तत्क्षणम्
ओष्ठौ वेपयति भ्रुवौ कुटिलयत्यानम्रयत्याननं
तां वन्दे मृदु हास पूर सुषमां कामाक्षि कामप्र्दे १९॥

ஆருடா ரபஸாத்புர: புரரிபோராஶ்லேஷணோ பக்ரமே
யா தே மாதருபைதி தி³வ்ய தடினீ ஶங்காகரீ தத்க்ஷணம்
ஓஷ்டௌ² வேபயதி ப்ருவௌ குடிலயத்யானம்ரயத்யானனம்
தாம் வந்தே³ ம்ருʼது³ ஹாஸ பூர ஸுஷமாம் காமாக்ஷி! காமப்ரதே* 19

*मेकाम्रनाथप्रिये/ஏகாம்ரநாதப்ரியே என்றும் பாடம்;

விரும்பிய அனைத்தையும் நிறைவேற்றும் தாய் காமாக்ஷியே! புரமெரித்தார் உன்னை அணைக்கத் துவங்கியதும், அவனை நோக்கி பெருகிய உன் மென்னகை, அவன் தலை கங்கைதானோ என்ற ஐயத்தைத் தோற்றுவித்து, அதனால் அக்கணமே உன்னுடைய உதடுகளைத் துடிக்கவும், புருவங்களை வளைக்கவும், முகத்தை குனியவும் செய்கிறதே, அந்த மென்னகைப் பெருக்கின் ஒளியை வணங்குகிறேன்.

புரமெரித் தாருனை போயணைக் கையிலே பொங்குமுன்மென்
சிரியவர் மேலணி தேவகங் கையென்னும் சேத்தளித்துன்
புருவங்கள் வில்லென பொன்முகம் தாழ்ந்தோட்டம் போய்துடிக்கும்!
விரும்பிய தாற்றுமவ் வீறைக்கா மாட்சீயான் வேண்டுவனே!

மென்சிரி-மந்தஹாசம்; சேத்து-ஐயம்; ஓட்டம்-உதடு; வீறு-ஒளி/காந்தி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...