ஜனவரி 17, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 18

या जाड्याम्बुनिधिं क्षिणोति भजतां वैरायते कैरवैः
नित्यं यां नियमेन या यतते कर्तुं त्रिनेत्रोत्सवम्
बिम्बं चान्द्रमसं वञ्चयति या गर्वेण सा तादृशी
कामाक्षि स्मितमञ्जरी तव कथं ज्योत्स्नेत्यसौ कीर्त्यते १८॥

யா ஜாட்³யாம்பு³ நிதிம் க்ஷிணோதி ஜதாம் வைராயதே கைரவை:
நித்யம் யாம் நியமேன யா யததே கர்தும் த்ரிநேத்ரோத்ஸவம்
பி³ம்ப³ம் சாந்த்³ரமஸம் வஞ்சயதி யா ³ர்வேண ஸா தாத்³ருʼஶீ
காமாக்ஷி ஸ்மிதமஞ்ஜரீ தவ கத²ம் ஜ்யோத்ஸ்னேத்யஸௌ கீர்த்யதே 18

காமாக்ஷியே! எந்த புன்னகையானது அண்டியவரின் அறியாமை எனும் கடலை வற்றச் செய்கிறதோ, எப்போதும் ஆம்பல் மலர்களோடு பகைமை பாராட்டுகிறதோ, முக்கண்ணனார்க்கு மகிழ்வை அளிக்க முயல்கிறதோ, தன் செருக்கால் சந்திர பிம்பத்தை வஞ்சிக்கிறதோ, அதை எவ்வாறு நிலவு என்று கூறுவது. (நிலவு கடலை வற்றச் செய்யாது; பொங்கச் செய்வது; ஆம்பலை மலரச் செய்யும்; பகையிருந்தால் செய்யுமா?  மாரவைரியார்க்கு மகிழ்வை அளிப்பது முரண்தொடையல்லவா?

துதிப்போர்க்குத் தொள்ளை சுழிவற்றச் செய்திடும், சுண்ணமாம்பற்
கிதரம்பா ராட்டும், கிரீசராம் முக்கண்ணர் கின்பளிக்கும்,
மதத்தால் மதிவிம்பம் மாயம்செய் யும்நின்றன் மந்தகாச
மதைமதி யென்றுகா மாட்சீ யுரைப்பதென் வாக்கினாலே?


துதிப்போர்-பஜிப்போர்; தொள்ளை-அறியாமை; சுழி-கடல்; சுண்ணம்-மலர்; இதரம்-பகை; கிரீசர்-சிவனார்; மதம்-செருக்கு; மாயம்-வஞ்சனை; மந்தகாசம்-மென்னகை;

படிக்கும்விதமாகவே பொருள் கொள்ளும்படியாக இப்பாடல் செய்யப்பட்டுள்ளது:


துதிப்போர்க்குத் தொள்ளைச் சுழி வற்றச் செய்திடும், சுண்ணம் ஆம்பற்கு இதரம் பாராட்டும், கிரீசராம் முக்கண்ணர்க்கு இன்பளிக்கும், மதத்தால் மதிவிம்பம் மாயம் செய்யும் நின்றன் மந்தகாசமதை மதியென்று காமாட்சீ உரைப்பதென் வாக்கினாலே?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...