ஜனவரி 16, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 17

येषां बिन्दुरिवोपरि प्रचलितो नासाग्रमुक्तामणिः
येषां दीन इवाधिकण्ठमयते हारः करालम्बनम्
येषां बन्धुरिवोष्ठयोररुणिमा धत्ते स्वयं रञ्जनं
कामाक्ष्याः प्रभवन्तु ते मम शिवोल्लासाय हासाङ्कुराः १७॥

யேஷாம் பி³ந்து³ரிவோபரி ப்ரசலிதோ நாஸாக்³ரமுக்தாமணி:
யேஷாம் தீ³ இவாதிகண்ட²மயதே ஹார: கராலம்ப³னம்
யேஷாம் ³ந்துரிவோஷ்ட²யோரருணிமா த்தே ஸ்வயம் ரஞ்ஜனம்
காமாக்ஷ்யா: ப்ரபவந்து தே மம ஶிவோல்லாஸாய ஹாஸாங்குரா: 17

எது, நாசியினின்று தொங்கும் புல்லாக்கின் முத்து, ஒரு பொட்டு மேனோக்கிச் செல்வது போன்ற தோற்றமோ, எதன் கைத்தாங்கலை கழுத்தணியானது களைத்தவன்போல் அடைகிறதோ, உதடுகளின் செம்மை, எதன் உறவினன்போல் தானும் செம்மையை அடைகிறதோ, அந்த, காமாக்ஷியின், புன்சிரிப்பின் கொழுந்துகள் எனக்கு மங்கலப்பெருக்கிற்கு உதவட்டுமே!

எதுபுல்லாக் கின்முத்து எம்பிபொட் டாய்ச்செல்லும் ஏழ்ச்சியாமோ,
எதைக்கைப்பற் றாய்யுன் எருத்தணி சோர்ந்தாற்போல் எய்திடுமோ.
எதனினத் தான்போல் இதழ்கள் சிவப்பினை ஏற்குமோவம்
மதநகைக் கண்ணிகா மாட்சி வரமீக மங்கலமே!


புல்லாக்கு-நாசி தொங்கணி; எம்பி-எழும்பி; ஏழ்ச்சி-தோற்றம்; கைப்பற்று- கைத்தாங்கல்; எருத்தணி-கழத்தின் ஹாரம்; எய்துதல்-அடைதல்; இனத்தான்-உறவினன்; மத-அழகு; கண்ணி-குருத்து/கொழுந்து; ஈக-தருக.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...