वक्षोजे घनसारपत्ररचनाभङ्गीसपत्नायिता
कण्ठे बन्धुरद्न्त
पत्रकुहनाव्यापार मुद्रायिता ।
ओष्ठश्रीनिकुरुम्बपल्लवपुटे प्रेङ्खत्प्रसूनायिता
कामाक्षि स्फुरतां मदीयहृदये त्वन्मन्दहासप्रभा ॥ १६॥
வக்ஷோஜே க⁴னஸாரபத்ரரசனாப⁴ங்கீ³ஸபத்னாயிதா
கண்டே² ப³ந்து⁴ரத³ந்தபத்ரகுஹநாவ்யாபார* முத்³ராயிதா ।
ஓஷ்ட² ஸ்ரீ நிகுரும்ப³ பல்லவ புடே ப்ரேங்க²த் ப்ரஸூனாயிதா
காமாக்ஷி ஸ்பு²ரதாம் மதீ³யஹ்ருʼத³யே த்வன்மந்த³ஹாஸப்ரபா⁴ ॥ 16॥
ஹே காமாக்ஷி! தனங்களின் மேலுள்ள,
பச்சைக் கர்ப்பூரப் பூச்சுக்கு எதிரி (மாற்றாள்/ஏதிலாள்/சக்களத்தி) போலிருப்பதும்,
கழுத்தில் தந்தத்தாலான அணி செய்யும் வஞ்சனைக்கு அடையாளம் போன்று, உதடுகளின் காந்தியெனும்
தளிர்களில் பூத்த ஒரு மலர்போன்றதுமான உன் புன்னகையின் காந்தியென் மனதில் ஒளிரட்டும்.
[* - “கண்டே மௌக்திஹாரயஷ்டி கிரணவ்யாபார
முத்ராயிதா” என்றும் ஒரு பாடமுண்டு. கழுத்தின் நீண்ட முத்தாரத்தின் ஒளியிலங்குவதன்
முத்திரைபோல என்று பொருள்! கண்டே என்பதற்கு பதிலாக “கர்ணே” என்றும் பாடமுண்டு]
பயோதரம் மேல்பூசும் பச்சைக்கற் பூரத்தின் பற்றிலாள்போல்
கயத்தந்த கண்டத்துக் காறைக்கு வஞ்சக் களங்கமும்போல்
தியோதத் துளிர்பூத் திலங்கு மலர்போல் திகழிதழ்மேல்
வயமென் நகையென் மனத்தேகா மாட்சி! வயக்குகவே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam