सादृश्यं कलशाम्बुधेर्वहति ते कामाक्षि मन्दस्मितं
शोभामोष्ठरुचाम्ब विद्रुमभवामेताद्भिदां ब्रूमहे ।
एकस्मादुदितं पुरा किल पपौ सधय: पुराणः पुमान्
अध्याप्यन्य समुद्भवं रसयते माधुर्यरूपं रसम् ॥ २१॥
ஸாத்³ருʼஶ்யம் கலஶாம்பு³தே⁴ர் வஹதி தே காமாக்ஷி மந்த³ஸ்மிதம்
ஶோபா⁴மோஷ்ட²ருசாம்ப³ வித்³ருமப⁴வாமேதாத்³பி⁴தா³ம் ப்³ரூமஹே ।
ஏகஸ்மாது³தி³தம் புரா கில பபௌ ஸத்⁴ய: புராண: புமான்
அத்⁴யாப்யந்ய ஸமுத்³ப⁴வம் ரஸயதே மாது⁴ர்ய ரூபம் ரஸம் ॥ 21॥
பாடபேதங்கள்: ஸாத்³ருʼஶ்யம்-ஸாஹய்யம்; ஸத்⁴ய-ஸர்வ; அத்⁴யாப்யந்ய - ஏதன்மத்ய; ரூபம் ரஸம் -ரூபாம் ஸுதாம்;
தாயே காமாக்ஷி!
உன் புன்னகை பாற்கடலுக்கொப்பானது; உதடுகள் காந்தியில் பவழத்தினின்று வரும் அழகைப் பெற்றன;
ஆயினும் இவ்விரண்டிலும் ஒரு வேற்றுமையைக் கூறுவோம். ஒன்றிலிருந்து வந்த விடத்தை ஆதிசிவன்
உண்டார்; மற்றதிலிருந்து வரும் இனிய ரசத்தை இன்றும் பருகிச் சுவைக்கிறார்
பாற்கட லுக்கேவொப் பாகும்நின் புன்னகை; பாலிகைகள்
மேற்கொள், பவழத்தின் மின்போல் அழகுறும்; மீதிருந்தும்
வேற்றுமை! ஒன்றின் விடத்தையோ ஆதி விழுங்கிவிட்டார்!
மாற்றதன் சாறென்றும் மாந்துகி றார்தாய்கா மாட்சியளே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam