उत्तुङ्गस्तनकुम्भशैलकटके विस्तारिकस्तूरिका-
पत्रश्रीजुषि चञ्चलाः स्मितरुचः कामाक्षि ते कोमलाः ।
सन्ध्यादीधितिरञ्जिता इव मुहुः सान्द्राधरज्योतिषा
व्यालोलामलशारदाभ्रशकलव्यापारमातन्वते ॥ २२॥
உத்துங்க³ ஸ்தன கும்ப⁴ ஶைல கடகே விஸ்தாரி கஸ்தூரிகா-
பத்ர ஸ்ரீஜுஷி சஞ்சலா: ஸ்மித-ருச: காமாக்ஷி! தே கோமலா: ।
ஸந்த்⁴யா தீ³தி⁴தி ரஞ்ஜிதா இவ முஹு: ஸாந்த்³ரா த⁴ர ஜ்யோதிஷா
வ்யாலோலா மல ஶாரதா³ப்⁴ர ஶகலவ் யாபாரமாதன் வதே ॥ 22॥
காமாக்ஷியே! வித்தாரமாக கஸ்தூரியால் எழுதப்பட்ட சித்திரங்களின் அழகு கொண்ட, உயர்ந்த கும்பமன்ன
தனபர்வதங்களின் தாழ்வரையில் திரிந்து கொண்டிருக்கும் உன் புன்சிரிப்பின் காந்தம், அழகு
உதடுகளின் ஒளியால் அடிக்கடி, மாலை நேரத்து ஒளியால் செம்மை செய்யப்பட்டவைபோல், கார்கால
வெண்மேகங்களின் சிதறிய துண்டுகளின் அழகை அடைகின்றன.
வியப்பீதச் சித்திர விந்தை உயர்கும்ப
வித்தனங்கள்
முயங்கும லைக்கீழா முன்மென்
நகையின் முருகதர
வயக்கால் அடிக்கடி மாலையின்
காந்திச்செம் மையடைந்து
வயக்குறும் காமாட்சீ! மாரிநாள்
வெண்மேக வார்களென்றே!
வியம்-விரிவு;
பீதம்-கத்தூரி; விந்தை-அழகு; வி-அழகு; தனங்கள்-கொங்கைகள்; முயங்கு-அணைதல்; முருகு-அழகு;
அதரம்-உதடு; வயக்கு-அழகு; மாலை-சாயுங்காலம்; காந்தி- ஒளி; வயக்குறும்- அழகுறும்; மாரிநாள்-கார்காலம்;
வார்-துண்டங்கள்;
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam