ஜனவரி 22, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 23

क्षीरं दूरत एव तिष्ठतु कथं वैमल्यमात्रादिदं
मातस्ते सहपाठवीथिमयतां मन्दस्मितैर्मञ्जुलैः
किं चेयं तु भिदास्ति दोहनवशादेकं तु संजायते
कामाक्षि स्वयमर्थितं प्रणमतामन्यत्तु दोदुह्यते २३॥

க்ஷீரம் தூ³ரத ஏவ திஷ்ட²து கத²ம் வைமல்ய மாத்ராதி³³ம்
மாதஸ்தே ஸஹபாட²வீதி²மயதாம் மந்த³ ஸ்மிதைர் மஞ்ஜுலை:
கிம் சேயம் து பிதா³ஸ்தி தோ³வஶாதே³கம் து ஸம்ஜாயதே
காமாக்ஷி! ஸ்வயமர்தி²தம் ப்ரணமதாமன்யத்து தோ³து³ஹ்யதே 23

தாயே! காமாக்ஷி! இந்த பாலானது, தூரத்திலேயே இருக்கட்டும்; இது வெண்மையால் மட்டும் உன்னழகு முறுவலை எப்படி ஒத்திருக்க முடியும்? இந்த வேற்றுமை இருக்கிறதே! பாலோ கறப்பதால் மட்டுமே கிடைக்கிறது! உன் மென்னகையோ துதிப்போர்க்குத் தானாகவே விரும்பியதனைத்தும் கறக்கிறதே!

இச்சுவை அப்பால் இருக்கட்டும் காமாட்சீ எம்மனையே!
இச்சுவை ஒத்திடல் எங்கனம் உன்னெழில் இன்னகைக்கு?
அச்சுவை பீச்சலால் அன்றோ கிடைப்பதாம்! அன்னைநகை
இச்சித் தவெல்லாம் இவண்சுரக் கும்தானே, ஏத்துவோர்க்கே!


சுவை-பால்; எம்மனையே-எம் அன்னையே; பீச்சல்-கறத்தல்; இச்சித்த-விரும்பிய;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...