कर्पूरैरम्रुतांशुभि: जननि ते कान्तैश्च चन्द्रातपै:
मुक्ताहारगुणैर्मृणालवलयैर्मुग्धस्मितश्रीरियम् ।
श्रीकाञ्चीश्वरि सज्जनै: समदया कामाक्षि! स्म्स्तुयते
तत्तादृङ्मम तापशान्तिविधये किं देवि मन्दायते ॥ २४॥
கர்பூரைரம்ருதாம்சு(பு)பி: ஜனனி!1 தே காந்தை: ச சந்த்³ராதபை:
முக்தா-ஹார-கு³ணைர் ம்ருணால-வலயைர்
மந்த ⁴ஸ்மித-ஸ்ரீரியம் ।
ஶ்ரீகாஞ்சீஶ்வரி ஸஜ்ஜநை: ஸமதயா காமாக்ஷி ஸம்ஸ்தூயதே2
தத் தாத்³ருʼங் மம தாப ஶாந்தி வித⁴யே கிம் தே³வி மந்தா³யதே ॥ 24॥
1அம்ருதர்ஜகஜ்ஜனனி,
அம்ருதாம்புபிர் ஜனனி. 2 ஸ்ரீகாஞ்சிபுர நாயிகே ஸமதயா
ஸம்ஸ்தூயதே ஸஜ்ஜனை: என்றும் பாடங்கள் உண்டு
அம்மையே!
தேவி! காஞ்சி நகரத்தவளே! ஹே காமாக்ஷி! உன்றன் இம்மென்னகையின் திருவானது, அமுதக்கதிர்க்களோடும்,
பச்சைக் கற்பூரத்தோடும், அழகுடைய நிலவோடும், முத்து மாலைகளோடும், தாமரைத் தண்டுகளோடும
ஒத்ததாக நல்லோர்களால் பாரட்டப்படுகிறதே! அத்தகையவொன்று என்னுடைய வருத்தத்தைத் தணிப்பதில்
ஏன் தாமதமாக செயல்படுகிறது!
அமுதக் கதிர்களும், அம்புயத்
தண்டும் அழகுமதி
யுமுத்தினால் செய்மாலை யும்பூ
ரபதி யுமொப்பதென
சுமனோர்சொல் பாராட்ட, சோர்வு
கொளலென்னென் சூடழிக்க,
கமழ்காஞ் சிவாழ்தேவி காமாட்சி
உன்மென்ன கைத்திருவே!
அம்புயம்-தாமரை; பூரபதி-பச்சைக் கற்பூரம்; சுமனோர்-நல்லோர்;
[பாடலைப் படிக்கும் வழியே பொருள்
கொள்ள: அமுதக்
கதிர்களும், அம்புயத் தண்டும் அழகுமதியும் முத்தினால் செய்மாலையும் பூரபதியும் ஒப்பதென
சுமனோர்சொல் பாராட்ட, சோர்வு கொளலென்னென்? சூடழிக்க, கமழ் காஞ்சிவாழ் தேவி காமாட்சியே
உன் மென்னகைத் திருவே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam