ஜனவரி 24, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 25


मध्येगर्भितमञ्जुवाक्यलहरी माध्वीझरी शीतला
मन्दारस्तबकायते जननि ते मन्दस्मितांशुच्छटा
यस्या वर्धयितुं मुहुर्विकसनं कामाक्षि कामद्रुहो
वल्गुर्वीक्षणविभ्रमव्यतिकरो वासन्तमासायते २५॥

மத்யே க³ர்பித மஞ்ஜுவாக்யலஹரீ மாத்வீஜ்ஜரீ ஶீதலா
மந்தா³ரஸ்தப³காயதே ஜனனி தே மந்த³ஸ்மிதாம் ஶுச் ச²டா
யஸ்யா வர்தயிதும் முஹுர் விகஸனம் காமாக்ஷி காமத்³ருஹோ
வல்கு³ர் வீக்ஷணவிப்ரமவ்யதிகரோ வாஸந்த மாஸாயதே 25

தாயே காமாக்ஷீ! உன் புன்னகையின் மலர்ச்சியை மேன்மேலும் மிகச் செய்ய காம வைரியின் அழகு பொருந்திய கண்பார்வையின் சுழலும் போக்கானது, வசந்த மாதமாக விளங்குகிறது; நடுவிலே அழகிய சொற்பெருக்கென்னும் தேனருவியால் குளிரிந்துள்ள உன்னுடை மென்னகையின் ஒளிக்கூட்டானது, மந்தாரப் பூங்கொத்தாக விளங்குகிறதே!

மாதாகா மாட்சியுன் மந்த நகைபூப்பை மற்றுமிகச்
சாதிக்கும் வேள்வைரி சாய்க்கண் சுழற்சிவ சந்தகால
மாதமாம்; ஊடே மதுச்சொற் பெருக்காம் மலையருவி
சீதங்கொள் உன்மென் சிரிதாரக் கொத்தாய் திகழ்கிறதே


மந்தநகை-மென்னகை; பூப்பு-மலர்வு; மற்றும்-மேலும், வேள்-மன்மதன்; சாய்-அழகு; சீதம்-குளிர்வு; தாரக்கொத்து-மந்தாரப் பூங்கொத்து;

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...