ஜனவரி 05, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 6

आशासीमसु सन्ततं विदधती नैशाकरीं व्याक्रियां
काशानामभिमानभङ्गकलनाकौशल्यमाबिभ्रती
ईशानेन विलोकिता सकुतुकं कामाक्षि ते कल्मष-
क्लेशापायकरी चकास्ति लहरी मन्दस्मितज्योतिषाम् ६॥

ஆஶா ஸீமஸு ஸந்ததம் வித³தீ நைஶாகரீம் வ்யாக்ரியாம்
காஶாநாமபிமான பங்க³ கலனா கௌஶல்யமாபி³ப்ரதீ
ஈஶானேன விலோகிதா ஸகுதுகம் காமாக்ஷி தே கல்மஷ-
க்லேஶாபாயகரீ சகாஸ்தி லஹரீ மந்த³ஸ்மித ஜ்யோதிஷாம் 6

காமாக்ஷியே! எப்போதும் திசைகளின் எல்லைகளிலும் சந்திரவொளியைச் செய்வதும், நாணல் பூக்களின் தற்செருக்கில் (வெண்மையில் சிறந்தவை என்னும்) அடக்குவதில் திறமை கொண்டதும், பரமசிவனால் ஆவலோடு காணப்பெறுவதும், தீவினைத் துன்பங்களைப் போக்குவதுமாக உன்னுடைய புன்னகையின் ஒளிப்பெருக்கு விளங்குகிறது.

திக்கெல்லை யாவிலும் திங்களின் காந்தியைச் செய்திடுமாம்;
இக்குகந் தைபூக்கள் ஏணாப் படக்கும் இயல்புடைத்தாம்;
நக்கனார் காண நயப்பதாம்; தீயூழ் நலிவைநீக்கத்
தக்கதாம்; காமாட்சீ சாய்வெள்ளப் புன்னகைத் தாம்நினதே!


திங்கள்-சந்திரன்; இக்குகந்தை-நாணல்; ஏணாப்பு-தற்செருக்கு; நக்கனார்-சிவன்; நயப்பு-ஆசை; தீயூழ்-தீவினை; நலிவு-துன்பம்; சாய்-ஒளி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...