येषां गच्छति पूर्वपक्षसरणिं कौमुद्वतः श्वेतिमा
येषां सन्ततमारुरुक्षति तुलाकक्ष्यां शरच्चन्द्रमाः ।
येषामिच्छति कम्बुरप्यसुलभामन्तेवसत्प्रक्रियां
कामाक्ष्या ममतां हरन्तु मम ते हासत्विषामङ्कुराः ॥ ५॥
யேஷாம் க³ச்ச²தி பூர்வபக்ஷ ஸரணிம் கௌமுத்³வத: ஶ்வேதிமா
யேஷாம் ஸந்ததமாருருக்ஷதி துலா கக்ஷ்யாம் ஶரச் சந்த்³ரமா: ।
யேஷாமிச்ச²தி கம்பு³ரப்ய ஸுலபா⁴மந்தே வஸத் ப்ரக்ரியாம்
காமாக்ஷ்யா மமதாம் ஹரந்து மம தே ஹாஸ த்விஷா மங்குரா: ॥ 5॥
ஆம்பல் மலர்களின் வெண்ணிறம் எவற்றுக்கு
வளர்பிறைபோல் முன்னோடியோ, சரத்கால சந்திரன் எதற்கு இணை என்னும் நிலையை மெல்ல எட்டிப்
பிடிக்க விரும்புகிறானோ, சங்கும் எதனிடமிருந்து பயிற்சி பெறும் சீடனென்னும் நிலையை
அடைய விரும்புகிறதோ, காமாட்சியின் அத்தகு புன் சிரிப்பின் ஒளிக்கதிர்கள் என்னுடைய மமதையைப்
போக்கட்டும்!
எதற்காம்பல் வெண்மை எழுபிறை போன்றதோ, எட்டுவதால்
எதற்குக்கார் சந்திரன் ஈங்கிணை யாக இவறுவனோ
எதன்சீடன் என்ன இவறுமோ வெண்சங்கும், இன்னகையாம்
அதனொளி மேட்டிமை அற்றென்னில், காமாட்சீ! ஆற்றுகவே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts
- Ashok Subramaniam