ஜனவரி 03, 2017

மூகபஞ்சசதீ - மந்தஸ்மித சதகம் - 4

या पीनस्तनमण्डलोपरि लसत्कर्पूरलेपायते
या नीलेक्षणरात्रिकान्तिततिषु ज्योत्स्नाप्ररोहायते
या सौन्दर्यधुनीतरङ्गततिषु व्यालोलहंसायते
कामाक्ष्याः शिशिरीकरोतु हृदयं सा मे स्मितप्राचुरी ४॥

யா பீன ஸ்தன மண்ட³லோபரி லஸத் கர்பூர லேபாயதே
யா நீலேக்ஷண ராத்ரி காந்தி ததிஷு ஜ்யோத்ஸ்னா ப்ரரோஹாயதே
யா ஸௌந்த³ர்ய துனீ தரங்க³ ததிஷு வ்யாலோல ஹம்ஸாயதே
காமாக்ஷ்யா: ஶிஶிரீ கரோது ஹ்ருʼ³யம் ஸா மே ஸ்மித ப்ராசுரீ 4

எது பருத்த மார்பகங்கள்மேல் ஒளிரும் கற்பூரப் பூச்சாகுமோ, எது கருத்த கடைக்கண்களாம் இரவிலினில் நிலா முளைவாய் தோன்றுமோ, எது அழகென்னும் ஆற்றலை ஆவளிகளில் அங்குமிங்கும் நீந்தும் அன்னமாகுமோ, அந்த காமாட்சியின் நிறைந்த புன்சிரிப்பென் இதயத்தைக் குளிர்விக்கட்டுமே!

பருத்த தனங்கள்மேல் பாமக்கற் பூரப் பரவலேதோ
கருத்த கடைக்கண் களாமிர வில்நிலாக் காலதேதோ
அரியாற்ற லைக்கங்கில் அங்குமிங் கும்நீந்தும் அன்னமேதோ
புரிகவக் காமாட்சீ புன்சிரி உள்ளம் புனல்பெறவே


பாமம்-ஒளி; பரவல்-பூச்சு; கால்-முளை; அரி-அழகு; கங்கு-வரிசை; புனல்-குளிர்ச்சி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

As much as I enjoy writing on various topics, you have right to comment, critique, vehemently disagree or share your happiness reading it. So, please let me know your thoughts

- Ashok Subramaniam

அமரேசன் திருப்பாதம் அகமேவ:

அமர்நாத் யாத்திரைக்குச் சென்றுவந்தபின் எழுதியது.. உடனே பெங்களூரு சென்றுவிட்டதால், உடனே பதிக்கமுடியவில்லை, பதிக்கவில்லை.. அதனாலென்ன? தாம...